ஜம்முவுக்குள் நுழைய சுஷ்மா, ஜேட்லிக்குத் தடை-பிரதமரிடம் அத்வானி புகார்
Page 1 of 1

டெல்லி: ஜம்முவுக்குச சென்ற நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோரை பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்தை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்திய செயல், இதுவரை இந்தியா கண்டிராதது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோபத்துடன் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.
நேற்று ஜம்முவுக்குச் செல்ல முயன்ற சுஷ்மாவையும், ஜேட்லியையும் விமான நிலையத்தை விட்டு வெளியேற பாதுகாப்புப் படையினரும், மாநில அரசு அதிகாரிகளும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் ஜம்மு விமான நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப் போவதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து பாஜகவினர் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கூறினார் அத்வானி. அவர் கூறுகையில், இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. சுஷ்மா சுவராஜும், ஜேட்லியும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள். அவர்களுக்கே இந்த கதி என்றால் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறி எழுகிறது. இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது என்றார் அத்வானி.
குடியரசு தின நாளின்போது ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இதற்காக ஸ்ரீநகர் நோக்கி பாஜகவினர் கிளம்பி வந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதுதான் தற்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
தட்ஸ்தமிழ்

Similar topics
» உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்!
» அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை
» சிறையில் கொடுமை:அப்துல் நாஸர் மஃதனி புகார்
» தொலைக்காட்சி சேனல்களையும் ப்ரஸ் கவுன்சில் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்-பிரதமரிடம் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
» அமெரிக்க அதிகாரிக்கு பாகிஸ்தானில் நுழைய அனுமதி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum