தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாஜகவின் யாத்திரை தடுக்கப்பட்டது!

Go down

 ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாஜகவின் யாத்திரை தடுக்கப்பட்டது!  Empty ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாஜகவின் யாத்திரை தடுக்கப்பட்டது!

Post by முஸ்லிம் Wed Jan 26, 2011 4:51 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லால்சவுக்கில் குடியரசு நாளன்று இந்தியக் கொடியை ஏற்றுவதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் "ஏக்தா யாத்திரை" என்ற பெயரில் சென்ற யாத்திரையை அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தடையை மீறி காஷ்மீருக்குள் செல்ல முயன்ற சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மற்றம் ஆனந்த் குமார் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தன்று காஷ்மீர் மாநிலம் லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றப்போவதாக பா.ஜ.க. அறிவித்தது. இதற்காக யாத்திரையாக சென்றனர். இந்த யாத்திரைக்கு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா, பிரிதமர் மன்மோகன் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவின் கூட்டணியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் பாஜகவின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் லால்சவுக்கில் நிச்சயம் கொடியேற்றுவோம் என பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர். கர்நாடகாவிலிருந்து ரயிலில் காஷ்மீர் சென்ற பா.ஜ.க.வினர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காஷ்மீர் மாநிலம் சென்ற பா.ஜ.க. தலைவர்கள், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் காஷ்மீர் விமான நிலையத்தில் சில மணி நேரம் சிறை வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கு சுஷ்மா சுவராஜ், அத்வானி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் யாத்திரையை கைவிடப்போவதில்லை, தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் சென்று லால்சவுக்கில் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று கொடியேற்றுவோம் என அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

பா.ஜ.க. தலைவர்களின் அறிவிப்பை தொடர்ந்து காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பா.ஜ., வினர் யாரும் நுழையாத படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீர் மாநில எல்லையில் யாரும் நுழையாத அளவிற்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ஆனந்த் குமார் ஆகியோர் பா.ஜ.க.வினருடன் காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். அவர்கள் பஞ்சாப் மாநிலம் லகன்பூர் என்ற இடத்தில், காஷ்மீர் மாநில எல்லையிலிருந்து 900 கி.மீ., தூரத்தில் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து காஷ்மீர் மாநில எல்லைக்குள் நுழைய முயற்சி செய்தனர்.

144 தடை உத்தரவை மீறிகாஷ்மீர் மாநில எல்லைக்குள் நுழைய முயற்சி செய்த பா.ஜ., தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ., கூறுகையில், காஷ்மீர் மாநில அரசு பிரிவினைவாதிகளிடம் சரணடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. சுமார் 500 பா.ஜ., தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், எங்கள் யாத்திரை திட்டமிட்டபடி தொடரும் என்றும், எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறினார். காஷ்மீர் மாநில அரசிற்கு கண்டனம் தெரவித்துள்ள சுஷ்மா, எங்களை கைது செய்துள்ளது நியாயமற்றது, எங்கள் உரிமைகள் மீறப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீர் மாநில அரசு தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடியை பாஜகவின் தேசியத் தலைவராக்க முயற்சி!
» கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» ஜம்மு-கஷ்மீர்:விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர்
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்
» பா.ஜ.கவினரின் அடாவடி: தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum