தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லிபியா மக்கள் புரட்சி! பலி 300ஆக உயர்ந்தது

Go down

லிபியா மக்கள் புரட்சி! பலி 300ஆக உயர்ந்தது  Empty லிபியா மக்கள் புரட்சி! பலி 300ஆக உயர்ந்தது

Post by முஸ்லிம் Tue Feb 22, 2011 5:03 pm

லிபியா: கடந்த 42 ஆண்டுகளாக லிபியா அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபியை பதவி விலக கோரி அங்கு மக்கள் புரட்சி போராட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவம் சுட்டதில் இதுவரை சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர்



தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது நகரெங்கும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். தலைநகர் டிரிபோலிக்கு அடுத்த படியான பெரிய நகரமான பென்காசியில் கலவரத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

அதே போன்று, நேற்று நடந்த இறுதி ஊர்வலத்திலும், ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எந்திர துப்பாக்கிகளால் சுட்டதில் பலர் மடிந்தனர். நேற்று முன்தினம் வரை 84 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. இந்த தகவலை மனித உரிமை கமிஷன் தெரி வித்துள்ளது

போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு தாங்கள் அஞ் சப்போவதில்லை. போராட்டத்தை ஒடுக்கியே தீருவோம் என அதிபர் கடாபியின் மகன் சாய்ப் அல்-இஸ்லாம் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, லிபியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என போராட்டக்காரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். லிபியாவை உடைத்து சிறு நாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு நடந்தால் லிபியாவுக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்காது. இதனால் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum