தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!
Page 1 of 1

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக் குழு கூட்டம் இன்று சென்னையில் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது. இந்த குழுவில் முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளதால் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் போன்றோர் தங்களிடம் வந்து ஆதரவு கேட்ட நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு குறித்து உறுதியளித்தால் ஆதரவு தருவதாக கூறியதாகவும் ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடப் பட வில்லை என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் தலைவர்கள் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு குறித்த உறுதிமொழி தங்கள் தேர்தல் அறிக்கையில் கட்டாயம் இடம் பெறும் என்றும் வாசகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என எழுதி வாங்கிச் சென்றது என்றும் இருப்பினும் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து எதுவும் தெரிவிக்காமல் அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என்றும் நம்பிக்கைத் துரோகம் செய்த அதிமுகவுக்கு தக்கப் பாடம் புகட்டுவது என முடிவு செய்துள்ளதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த அதிமுகவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த வரியை மட்டும் காப்பியடிக்காமல் விட்டுள்ளது என்றும் வேட்பாளர் தேர்வில் அதிமுக இஸ்லாமியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வில்லை என்றும் இத காரணமாக திமுகவுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று பொதுக் குழு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
இந்நேரம்

Similar topics
» மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி
» மோடி உண்ணாவிரதம் : ஜெயலலிதா ஆதரவு
» இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக நல்லிணக்க ரதயாத்திரைக்கு போலீஸ் தடை – நூற்றுக்கணக்கானோர் கைது
» பிரதமர் வருகையால் முஸ்லிம்கள் தொழ தடை: தௌஹீது ஜமாஅத் கண்டனம்!
» நெல்லையிலும் முதல்வரைக் கண்டித்து தவ்ஹித் ஜமாஅத் போஸ்டர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum