குரான் எரிப்புக்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு
Page 1 of 1

அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தில் முஸ்லிம்களின் சமய நூலான குரானை எரித்த பாதிரியாருக்கு கடும் கண்டனம் எழுப்பப்பட்டது. ஒபாமா நிர்வாகம் இது குறித்து பெருங்கவலை கொண்டுள்ளதாகவும், மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
"மரியாதைக் குறைவான, சகிப்புத்தன்மையற்ற, பிரிவினைக்கு வழிகோலும் இச்செயலுக்கு எதிராக எங்கள் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். மதக் குழுக்களின் இத்தகைய கேடுகெட்ட தாக்குதல் முயற்சிகளைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் " என்று அமெரிக்க அரசின் பிரதிநிதி மார்க் டோனர் லிபியாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்
"பொதுமக்களிடமிருந்தும் இந்நிகழ்வு கடும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. இவாஞ்சலிகல் தேசிய சங்கம், சதர்ன் பாப்டிஸ்ட் கன்வென்ஷன், "ஆண்ட்டி டீஃபமேஷன் லீக்' உள்ளிட்ட அமைப்புகளும் இதைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றன" என்றார் மார்க் டோனர்
மதச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உலகளாவிய உரிமைகள் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ளோம், இதுவே அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திலும், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
"எந்த ஒரு மதப் புனித புத்தகத்தையும் உள்நோக்கோடு களங்கம் செய்வதை ஒரு போதும் ஏற்பதற்கில்லை ". "மதச் சுதந்திரமும், சகிப்புத்தன்மையும் அமெரிக்காவின் அடிப்படைத் தூண்கள்" என்றார் டோனர்
வெள்ளை மாளிகை நூலகத்தில் குரானின் பிரதி இருப்பதையும், அமெரிக்காவின் நிறுவத் தலைவர்களுள் ஒருவரான தாமஸ் ஜெஃபர்சனின் மந்திரிசபை உறுப்பினர் ஒருவர் குரானின் பெயரால் சத்திய பிரமாணம் எடுத்ததையும் மார்க் டோனர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையே, கடந்த வாரம் ஃப்லோரிடா மாகாணத்தில் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தினைக் குறித்து சர்ச்சைக்குரிய பாதிரி டெர்ரி ஜோன்ஸ் மற்றும் அவரது சிறு ஆதரவாளர்கள் மீது கருத்து சொல்ல அமெரிக்க வாழ் முஸ்லிம் சமூகம் மறுத்துள்ளது.
இந்நேரம்

Similar topics
» மத்தியபிரதேசம்:இன்று சூரிய நமஸ்காரம் செய்ய பள்ளி மாணவர்களுக்கு பா.ஜ.க அரசு நிர்பந்தம் – கடும் எதிர்ப்பு
» இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு
» 25 சதவீத இடஒதுக்கீடு: சிறுபான்மை கல்வி நிறுவன நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு
» பாகிஸ்தானில் பிரம்மாண்ட அமெரிக்க எதிர்ப்பு பேரணி
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய அக்கிரமம்:முஸ்லிம் உலகில் கடும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum