உஸாமாவின் உடலை கடலில் வீசிய அக்கிரமம்:முஸ்லிம் உலகில் கடும் எதிர்ப்பு
Page 1 of 1

கெய்ரோ:உஸாமா பின்லேடனின் உடலை கடலில் வீசிய நடவடிக்கையில் முஸ்லிம் உலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள அபட்டாபாத்தில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட உஸாமாவின் உடலை அமெரிக்க ராணுவம் இறுதி சடங்கை முடித்தபிறகு கடலில் வீசியுள்ளதாக அறிவித்தது.
அபட்டாபாத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாக்.கடல் பிரதேசத்திலிருந்து திரும்பி அரபுக்கடலில் நங்கூரமிட்ட அமெரிக்க விமானந்தாங்கி கப்பலில் கொண்டுவரப்பட்ட உஸாமாவின் உடல் இஸ்லாமிய சட்டத்தின்படி கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், உஸாமாவின் உடலை கடலில் வீசியது இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணானது என அல் அஸ்ஹர் பல்கலைக்கழக இமாம் ஷேக் அஹ்மத் தய்யிப் குற்றஞ்சாட்டியுள்ளார். கப்ரில் (மண்ணறை) அடக்கம் செய்யும் பொழுதுதான் இறந்த உடல் மீதான கடமை பூர்த்திச்செய்யப்படும். ஒருவர் எவ்வகையில் மரணித்தாலும் அவருடைய இறந்த உடலுக்கு கண்ணியம் அளிப்பதுதான் நாகரீகமுடையவர்களின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
நிலத்தில் வைத்து கொல்லப்பட்ட ஒருவரின் உடலை கடலில் அடக்கம் செய்வது என்ன காரணம் கூறினாலும் அது இஸ்லாமிய சட்ட திட்டங்களை மீறிய செயல் என அமெரிக்கா ஃபிக்ஹ் கவுன்சிலின் தலைவர் முஸம்மில் சித்தீக்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இதே கருத்தை பிரான்சின் க்ராண்ட் மஸ்ஜிதின் தலைவர் உட்பட பல்வேறு மார்க்க அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கையை துபாயின் க்ராண்ட் முஃப்தி முஹம்மது அல் குபைஷி கண்டித்துள்ளார்.
ஒரு முஸ்லிமின் உடலை மண்ணறையில் அடக்கம் செய்யாமல் கடலில் வீசுவது அந்த மனிதருக்கு மட்டுமல்ல இஸ்லாத்திற்கு இழைக்கும் அவமதிப்பாகும் என ஈராக்கின் பாக்தாதில் அபூஹனீஃபா மஸ்ஜிதின் தலைவர் அப்துஸ்ஸத்தார் அல் ஜனபி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்நடவடிக்கை முஸ்லிம்களை கொந்தளிப்பிற்கு ஆளாக்கவிட்டால் தான் ஆச்சரியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் வேளையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை பல நாட்கள் கரைக்கு வரும் வரை வைத்திருப்பது பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவ்வேளையில் மட்டுமே கடலில் அடக்கம் செய்ய அனுமதியுள்ளது என துனீசியாவின் பிரபல மார்க்க அறிஞர் அஹ்மத் அல் கர்பி கூறியுள்ளார்.
அமெரிக்கா முஸ்லிம்களை அவமானப்படுத்தியுள்ளதாக லெபனானின் பிரபல மார்க்க அறிஞர் உமர் பத்மி முஹம்மது குற்றஞ்சாட்டியுள்ளார்.
உஸாமாவின் உடலுக்கு அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள இழுக்கினால் அந்நாட்டின் மீது முஸ்லிம் உலகின் வெறுப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதற்கிடையே அமெரிக்கா, உஸாமாவின் உடலை கடலில் வீசியதாக கூறப்படுவது, உஸாமாவின் மரணத்தை குறித்து மேலும் சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது. உஸாமாவை நிலத்தில் அடக்கினால் அது எதிர்காலத்தில் புனித ஸ்தலமாக மாறிவிடும் என கருதி கடலில் வீசியதாக அமெரிக்கா விளக்கமளிக்கிறது.

Similar topics
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய சம்பவம்-அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும்-மகாதீர் முஹம்மது
» உஸாமாவின் உடலை அவசரமாக அடக்கம் செய்ய காரணம் என்ன?
» இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு
» குரான் எரிப்புக்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு
» 25 சதவீத இடஒதுக்கீடு: சிறுபான்மை கல்வி நிறுவன நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum