சி.ஐ.ஏவின் கொலைப்பட்டியலில் மேலும் 29 பேர்
Page 1 of 1

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஸ்பெஷல் ஆபரேசன் என்ற பெயரில் சி.ஐ.ஏ தயாராக்கியுள்ள ஹிட் லிஸ்டில் 29 பேர் உள்ளனர். ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக போராடுகிறார்கள் என்பது தான் அமெரிக்காவின் பார்வையில் இவர்கள் செய்த குற்றம்.
உஸாமா பின்லேடன் இரத்த சாட்சியாக மாறியதைத் தொடர்ந்து கொலை பட்டியலில் இடம்பெற்றோரின் எண்ணிக்கை 29ஆகியுள்ளது. இந்த கொலை பட்டியலில் இடம்பெற்றிருப்போர் பெரும்பாலும் அல்காயிதா மற்றும் தாலிபான் இயக்கத்தைச் சார்ந்தவர்களாவர்.
அல்காயிதாவின் பிரபல தலைவரும், உஸாமாவின் அடுத்த இடத்திலுள்ளவருமான டாக்டர்.அய்மான் அல் ஜவாஹிரி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க போர் வெறியர் ஜார்ஜ் புஷ் துவங்கி வைத்த தனிநபர் படுகொலை பணி ஒபாமா பதவியேற்ற போது சற்று ஓய்ந்திருந்தது. ஆனால் சி.ஐ.ஏவின் தலைவராக பனேட்டா பொறுப்பேற்ற போது சர்வதேச சட்டங்களை காற்றில் பறத்தும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வலு கூடியுள்ளது. இத்தகைய கொலைப்பணிகளுக்கு ஒபாமா தனியாக உத்தரவிட்டுள்ளார் என கருதப்படுகிறது.
ஷேக் யூனுஸ் அல் மவ்ரித்தானி, தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமர், அல்காயிதாவின் ராணுவ தலைவர் எனக் கருதப்படும் ஸைஃபுல் ஆதில், ஹக்கானி போராளி இயக்கத்தின் தலைவரான ஜலாலுத்தீன் ஹக்கானி, இன்னொரு தலைவர் சிராஜுத்தின் ஹக்கானி, உஸாமாவின் மகன் ஸஅத் பின் லேடன், அமெரிக்க குடிமகனும் யெமன் வம்சாவழியைச் சார்ந்தவருமான அன்வர் அவ்லாக்கி, அபூ இப்ராஹீம், தெஹ்ரீக்-இ-தாலிபான் தலைவர்களான ஹக்கீமுல்லாஹ் மஹ்சூத், ஃபக்கீர் முஹம்மது உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் யெமன் வம்சாவழியைச் சார்ந்த மார்க்க அறிஞர் அன்வர் அவ்லாக்கியைத் தவிர இதர நபர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கின்றனர்.

Similar topics
» சிரியா:போராட்டம் தொடர்கிறது – மேலும் 12 பேர் மரணம்
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
» இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சலுகைகள்: எஸ்.எம்.கிருஷ்ணா
» பிரஷாந்த் பூஷன் தாக்குதல்: மேலும் இருவர் கைது
» அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் இழுத்து மூடப்பட்டன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum