ஒரே ஒரு நபர் – பல மரணங்கள்
Page 1 of 1
ஒரே ஒரு நபர் – பல மரணங்கள்
லண்டன்:அமெரிக்க கமாண்டோ படையினரின் தாக்குதலில் அல்காயிதா போராளி இயக்கத் தலைவர் உஸாமா பின்லேடன் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட போதிலும் இதற்கு முன்பும் பல தடவை அவர் மரணித்ததாகவோ அல்லது கொலை செய்யப்பட்டதாகவோ செய்திகள் வெளியாகியிருந்தன.
இவற்றில் மிகவும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டவர் கொல்லப்பட்ட முன்னாள் பாக்.பிரதமர் பெனாசிர் பூட்டா ஆவார். 2007-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு பெனாசிர் அளித்த பேட்டியில் அஹ்மத் உமர் ஷேக் என்பவர் உஸாமாவை கொலை செய்ததாக உறுதியாக தெரிவித்தார்.
பெனாசிரை பேட்டியெடுத்தவர் பிரபல பிரிட்டீஷ் பத்திரிகையாளர் டேவிட் ப்ரோஸ்ட். உமர் ஷேக்கும் சாதாரண நபரல்ல சி.ஐ.ஏ மற்றும் மொஷாதின் ஏஜண்டும் வாஷிங்டன் போஸ்டின் ரிப்போர்ட்டருமான டேனியல் ப்யர்லை கொலை செய்த குற்றத்திற்காக பாகிஸ்தானில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
இதற்கு முன்பு 2001-ஆம் ஆண்டு உஸாமா மரணித்ததாக செய்தி வெளியானது. எகிப்திய பத்திரிகையான வஃப்த் ஒரு தாலிபான் செய்தி தொடர்பாளரை மேற்கோள்காட்டி உஸாமா மரணித்த செய்தியை வெளியிட்டது. தான் உஸாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாக அவர் பாகிஸ்தானின் அப்ஸர்வர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதை வஃப்த் வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டது. 2001-ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசும் உஸாமாவின் மரணத்தை உறுதி செய்தது.
ஜனவரி 2002-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பின்லேடன் மரணித்த செய்தியை அறிவித்தார். அதிர்ஷ்டவசமாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உஸாமா மரணித்த செய்தியை ’நான் அவ்வாறு கருதுகிறேன்’ என்று மட்டுமே தெரிவித்தார். என்னவாயினும், தொடர்ந்து ஜார்ஜ் புஷ்ஷும், துணை அதிபர் டிக் சென்னியும் உஸாமா வேட்டையிலிருந்து பின்வாங்கினர். உஸாமா உயிரோடு இருக்கின்றாரா? இறந்துவிட்டாரா? என்பது தெரியவில்லை என இருவரும் தெரிவித்தனர்.
2001-டிசம்பர் மாதம் உஸாமா ஆப்கானிஸ்தானில் தோரா போரா மலையில் நடந்த குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக மொசாத் மீண்டும் தெரிவித்தது. 2006-ஆம் ஆண்டு உஸாமா டைஃபாய்டு ஜுரம் பாதித்து மரணித்து விட்டதாக பிரான்சு நாட்டைச்சார்ந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டது.

Similar topics
» வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?
» 7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு
» பீகார்:மீண்டும் போலீஸ் வெறித்தனம் – 50 வயது முஸ்லிம் நபர் அடித்துக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum