பீகார்:மீண்டும் போலீஸ் வெறித்தனம் – 50 வயது முஸ்லிம் நபர் அடித்துக் கொலை
Page 1 of 1

பாட்னா:பீகார் மாநிலத்தில் ஆட்சி புரிந்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க-ஐக்கியஜனதாதளம் கூட்டணி அரசின் போலீஸ் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு போர்ப்ஸ் கஞ்சில் 5 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது முஸஃபர்பூரில் 50 வயது முஸ்லிம் நபர் போலீஸ் வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
பீகார் மாநில முஸஃபர்பூர் நகரில் தரம் சமாஜ் சமஸ்கிருத கல்லூரிக்கு அருகே தையல் கடை நடத்தி வந்தார் ஸம்சுதீன். இவருக்கு வயது 50. கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன்பாக கல்லூரி வளாகத்தில் வைத்து இரண்டு முஸ்லிம் இளைஞர்களை 4 போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலை பொறுக்கவியலாத இளைஞர்கள் காப்பாற்றக்கோரி குரல் எழுப்பியுள்ளனர். இதனைக் கண்ணுற்ற ஸம்சுதீன் ஓடோடிவந்து போலீசாரை தடுத்து இளைஞர்களை தாக்குவதை தடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர்களை தாக்குதவதை நிறுத்திய போலீசார் சற்றும் இரக்கமில்லாமல் ஸம்சுதீனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஸம்சுதீன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டார்.
ஸம்சுதீன் கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட அருகிலுள்ள ஊர்மக்கள் திரண்டுவந்து போலீசாரை பிடிக்க துரத்தியுள்ளனர். ஆனால் போலீஸ்காரர்கள் தப்பிவிடவே போலீஸ்காரரின் மோட்டார் பைக்கிற்கு தீவைத்துள்ளனர். ஸம்சுதீனின் உடலை கல்லூரி முக்கிய வாயிலுக்கு முன் கிடத்தியவாறு நீதிக்கோரி போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்ட்ரேட், மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்ட், மண்டல போலீஸ் ஐ.ஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்தியதில் போலீஸார் குற்றவாளிகள் என தெரியவரவே அவர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார் ஐ.ஜி. மேலும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Similar topics
» 13 வயது தில்ஷன் கொலை வழக்கு: ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது!
» இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி
» சொராஹ்புதீன் வழக்குத் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்
» தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்
» மும்பை குண்டுவெடிப்பு:ஊகங்களின் பின்னால் அலையும் போலீஸ் – வேட்டையாடப்படும் முஸ்லிம் இளைஞர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum