13 வயது தில்ஷன் கொலை வழக்கு: ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது!
Page 1 of 1

இராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து மரத்தில் பழம் பறித்த 13 வயது சிறுவன் தில்ஷனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை சிபி சிஐடி காவல்துறையினர் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 3ம் திகதி அன்று சென்னை இராணுவ குடியிருப்பு வளாகத்திற்குள் இருக்கும் ஒரு மரத்திலிருந்து பழம் பறிப்பதற்கு முயன்ற 13 வயது சிறுவன் தில்ஷன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தான். பொதுமக்கள் போராட்டம் வலுக்கவே, இவ்வழக்கு சிபி சிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது. சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றவாளியை பிடிப்பதற்காக சிபி சிஐடி காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இறுதியாக பணியிலுள்ள ஒரு இராணுவ அதிகாரி மீதும், ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி மீதும் சிபி சிஐடியினரின் சந்தேகம் வலுவாக எழுந்தது.
இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜ் என்பவர் சம்பவ நிகழ்ச்சியை பற்றி கூறியவை முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், சிபி சிஐடியினரின் குறி அவர்மீது திரும்பியது. விசாரணையின் பிடி வலுக்கவே, கந்தசாமி ராமராஜ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சிறுவனை சுட்ட துப்பாக்கியை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் வீசி எறிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
கூவம் ஆற்றில் அவர் கூறிய இடத்தில் காவல்துறையினர் தீவிரமாக தேடி 0.3 எம்.எம். கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும், இதற்கான ‘லைசன்ஸ்’ பெறப்பட்டுள்ளதாகவும் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கந்தசாமி ராமராஜ் ’லெப்டினட் கர்னல்’ பதவியிலிருந்து கடந்த ஏப்ரல் 2011ல் ஓய்வு பெற்றுள்ளார் என்றும், அந்த இராணுவ குடியிருப்பு வளாகத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார் என்றும், மரத்தின் மீது கல் எறிந்துகொண்டிருந்த சிறுவன் தில்ஷனை பார்த்ததும் அவர் அந்த கைத்துபாக்கியால் சுட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜாம்வால் கூறுகையில், இராணுவமும் அருகில் உள்ள இந்திரா நகர் பொதுமக்களும் இப்பகுதியில் நட்புடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும், இவ்வழக்கு விசாரணை முடிந்த பிறகு அருகில் வாழும் பொதுமக்கள் இராணுவத்தினர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்நேரம்

Similar topics
» 13 வயது பலஸ்தீன் சிறுமி கைது
» பீகார்:மீண்டும் போலீஸ் வெறித்தனம் – 50 வயது முஸ்லிம் நபர் அடித்துக் கொலை
» நியமத் அன்ஸாரி கொலை வழக்கு:சி.பி.ஐ விசாரிக்கவேண்டும்-மத்திய அரசு
» கஷ்மீர் மாநில மனித உரிமைகள் குழுவின் உத்தரவின் பேரில் மூத்த போலிஸ் அதிகாரி கைது
» அணு விஞ்ஞானி கொலை:குற்றவாளிகள் கைது – ஈரான் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum