சொராஹ்புதீன் வழக்குத் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல்
Page 1 of 1

காந்திநகர்:போலியாக உருவாக்கப்பட்ட சொராஹ்ரபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில், சி.பி.ஐ. சபர்மதி மத்திய சிறைச்சாலைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.
இதுத்தொடர்பான வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஒருவருக்கு சிறைச் சாலையில் கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக இந்த நோட்டிஸை சி.பி.ஐ. அனுப்பி உள்ளது.
இவ்வழக்குத் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு சபர்மதி சிறையில் உள்ள அப்துல் ரஹ்மான் ஷெய்க் என்பவரே மிரட்டலுக்குள்ளான அந்த போலீஸ் அதிகாரி.
இவர் சிபிஐ-யிடம், வழக்கு விசாரணையை குஜராத்திற்கு வெளியிலிருந்து நடத்துமாறு கேட்டு மனு அளித்ததிலிருந்து தனக்கு சபர்மதி சிறைச்சாலையின் உள்ளிருந்து கொலை மிரட்டல் வருவதாக சி.பி.ஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பாதுகாப்பு விசயத்தை கருதில்கொண்டு சபர்மதி சிறைச்சாலையின் உள்ளே தனக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்குமாறு மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
மாவட்ட நீதிமன்றத்தின் உயர்நீதிபதியான A.Y.தேவ் இதுத் தொடர்பாக சபர்மதி சிறைச்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுத் தொடர்பான விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
ரஹ்மான், எந்த ஒரு காவல்துறை அதிகாரின் பெயரையும் தன்னுடைய மனுவில் குறிப்பிடவில்லை. சிறைச்சாலைக்கு உள்ளே தனது பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தும் படியும் கூறியுள்ளார்.
இவ்வழக்குத் தொடர்பாக, தான் மற்றும் தன்னுடனுள்ள மற்ற குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் வழக்கு விசாரைனையை குஜராத்துக்கு வெளியில் நடத்துமாறு மனு அளித்ததில் இருந்து மிரட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான், 2005-ம் ஆண்டு போலி என் கவுண்டரில் கொலைச் செய்யப்பட்ட சொராஹ்ராபுதீன் ஷெய்க் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள D.G.வன்சரா மற்றும் IPS அதிகாரிகளுடன் சிறைச் சாலையில் உள்ளார். இருந்த போதிலும் இவர் யாருடைய பெயரையும் தனது மனுவில் குறிப்பிடவில்லை, தன்னை மிரட்டியவர்களின் பெயரை வெளியிட்டால் அது மேலும் தனக்கு ஆபத்தாகிவிடும் என்றும், அவர் கூறி உள்ளார்.

Similar topics
» மோடியின் பங்கினை வெளிப்படுத்திய அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!
» பீகார்:மீண்டும் போலீஸ் வெறித்தனம் – 50 வயது முஸ்லிம் நபர் அடித்துக் கொலை
» அமெரிக்க அதிகாரிக்கு பாகிஸ்தானில் நுழைய அனுமதி மறுப்பு
» குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் – மோடி அரசுக்கு மேலும் பின்னடைவு
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum