விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
Page 1 of 1

அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணைய தளம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி செய்திகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
ஈராக் போர் மற்றும் ஆப்கன் போர் ஆகியவற்றில் அமெரிக்க இராணுவம் பல தகவல்களை மறைத்தது. விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் திரைமறைவு விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது மேலும் பல தகவல்களை வைத்திருப்பதாகவும், அந்த தகவலில் உள்ள விசயங்கள், அமெரிக்க அரசு தனது நட்பு நாடுகளுடன் உள்ள உறவை முறிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் உள்ளது.
முன்னர் வெளியிடப்பட்டதை விட ஏழு மடங்கு அதிகமாக (30 இலட்சம்) கோப்புகளை விக்கிலீக்ஸ் வைத்திருக்கும் என்றும் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி செய்திகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது நட்புநாடுகளையும் இந்தியாவையும் எச்சரித்து உள்ளது. இது பற்றி அமெரிக்காவின் தகவல் தொடர்பாளரான பி.ஜே. கிரவுலி என்பவர் கூறுகையில், விக்கிலீக்ஸ் என்ன தகவல்களை தன்னிடம் வைத்துள்ளது என்றோ அல்லது அடுத்து என்ன செய்ய இருக்கிறது என்பது பற்றியோ குறிப்பாக தெரியவில்லை. நாங்கள் எங்கள் நிலையை தெளிவாக விளக்கி விட்டோம். இந்த கோப்புகள் வெளியிடப்படக்கூடாது என்று கூறினார்.
மேலும், எங்கள் துறை அதிகாரிகள், ஜெர்மனி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டுத் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு இது பற்றி அறிவுறுத்தியுள்ளனர் என தனது டுவிட்டரில் கிரவுலி குறிப்பிட்டுள்ளார்.
இந்நேரம்

Similar topics
» அணு சக்தி ஒப்பந்தத்தைமுழுமையாக அமுல்படுத்த வேண்டும் – இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு
» தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவுக்கு இடமில்லை
» மோடியின் பங்கினை வெளிப்படுத்திய அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum