தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு

Go down

தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு   Empty தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு

Post by முஸ்லிம் Thu May 12, 2011 5:06 pm

புதுதில்லி:அல் கொய்தாவுடன் தப்லீக் ஜமாத்திற்கு தொடர்பு உள்ளது என்று விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டதை குறித்த பிரச்சனைக்கு பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து கிடைத்த ஆதரவை தொடர்ந்து தப்லிக் ஜமாத் விக்கிலீக்சை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்சின் கூற்றை நிராகரித்த தப்லீக் ஜமாத் தங்களின் அமைப்பு தீவிரவாதிகளின் உறைவிடம் அல்ல என தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்ட பின் முதன் முறையாக தப்லீக் ஜமாத்தின் சார்பாக மறுப்பு தெரிவித்து மீடியாவிற்கு பேட்டியளித்த மௌலானா யூசுப் சுலேறி Twocircles.net என்ற இணையதள பத்திரிக்கையிடம் தப்லீக் ஜமாத் அல் கொய்தாவுடனோ அல்லது வன்முறையில் ஈடுபடும் வேறு எந்த அமைப்புடனோ தொடர்பு வைத்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மௌலானா யூசுப் சுலேறி கூறியுள்ளதாவது அல் கொய்தா குறித்த எங்களின் நிலைப்பாட்டை யாராவது அறிய ஆர்வம் காட்டினால் அவர்களுக்கு நான் கூறி கொள்வது என்னவென்றால் இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் எந்த வன்முறைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிப்பது இல்லை என கூறினார். தப்லீக் ஜமாத்தின் தலைமையிடமான பங்கலேவலி மஸ்ஜிதில் பத்திரிக்கையாளருடன் நடந்த உரையாடலில் இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் அணைத்து வன்முறைகளுக்கும் தாம் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் வன்முறை இஸ்லாத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

மௌலானா சுலேறி தங்கள் பணி குறித்து தெரிவிக்கும் பொழுது தாங்கள் முழுமையாக இறைவனக்கத்திலும், தங்களுடைய இறை நம்பிக்கையை பலப்படுத்துவதிலும், அல்லாஹ்வை நினவுக்கூருவதிலும் ஈடுபாடு செலுத்துபவர்கள் என்றும் மேலும் ஒற்றுமையையும் சகோதர பாசத்தையும் வளர்ப்பதே தங்கள் முழுநேர பணியாகும் எனவும் தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் சமீபத்தில் அல் கொய்தா தப்லீக் ஜமாத்தை தங்களுடைய தகவல் பரிமாற்றத்திற்கும் மற்றும் தங்களுக்கு தங்க இடம் கொடுக்கவும் பயன் படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தது. குவாண்டோமோ சிறையில் இருக்கும் கைதிகள் இத்தகவலை தங்களுக்கு அளித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அனுப்பிய கம்பிவட தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளது.

குறைந்தது மூன்று பேர்களாவது தப்லிக் ஜமாத்தின் தில்லி தலைமையகத்தில் வந்து தங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அணைத்து முஸ்லிம் அமைப்புகளும் தப்லீக் ஜமாஅத் போன்ற தூய்மையான இஸ்லாமிய அமைப்பின் மீது களங்கம் சுமத்தவே இப்படி அல் கொய்தாவுடன் தப்லீக் ஜமாத்திற்கு தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளுக்கு இங்கு இடமில்லை-தப்லீக் ஜமாத் விக்கிலீக்சை தாக்கு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum