காந்தியின் கொள்கைகள் எனக்கு உத்வேகமளிக்கிறது-புஷ் மீது ஷூ வீசிய முன்தஸர் அல் ஸெய்தி
Page 1 of 1

புதுடெல்லி:இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகளின் கொள்கைகள் தனக்கு உத்வேகமளிப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்.W.புஷ் மீது ஷூ வீசியதன் மூலம் உலக பிரசித்திப் பெற்ற பத்திரிகையாளர் முன்தஸர் அல் ஸெய்தி தெரிவித்துள்ளார். தான் போற்றும் காந்தியின் பிறந்த மண்ணான இந்தியாவிடம் தனக்கு நன்றி உண்டு என ஸெய்தி கூறினார்.
அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்புத் தொடர்பாக முன்தஸர் அல் ஸெய்தி எழுதிய நூலை அடிப்படையாக கொண்டு பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் தயாரித்த ‘இறுதி வாழ்த்துக்கள்’ என்ற நாடகத்தை பார்த்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் முன்தஸர் அல் ஸெய்தி.
’திடமான உறுதி இருந்தால் உங்களுக்கு சுதந்திரமுண்டு’ என காந்தி தெரிவித்த வார்த்தைகள் தன்னை ஈர்த்ததாக ஸெய்தி கூறினார். இரண்டு தினங்கள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ளார் ஸெய்தி. 2008-ஆம் ஆண்டு ஈராக்கில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கும் வேளையில் முன்தஸர் அல் ஸெய்தி புஷ் மீது ஷூவை வீசினார். இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் எழுதிய நூல்தான் “இறுதி வாழ்த்துக்கள்”.
மகேஷ்பட் தயாரித்துள்ள 70 நிமிட நாடகத்தின் திரைக்கதையை ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ஈராக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் முன்தஸர் அல் ஸெய்தியின் ஷூ எறிதல் ஆகிய சம்பவங்களை உள்ளடக்கிய இந்நாடகம் பிரபல கவிஞர் பாயிஸ் அஹ்மத் பாயிஸின் இரண்டுவரி கவிதைகளோடு துவங்குகிறது. அநீதிக்கெதிராக குரல் எழுப்பும் முன்தஸர் அல் ஸெய்தியை மகேஷ் பட் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கோடு ஒப்பிட்டுள்ளார்.

Similar topics
» அரபு பா.உ. மீது தண்ணீரை வீசிய இஸ்ரேலியப் பெண் பா.உ.
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை
» உஸாமாவின் உடலை கடலில் வீசிய சம்பவம்-அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும்-மகாதீர் முஹம்மது
» ஒபாமாவுக்கு புஷ் நன்றி
» எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum