தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பழிக்குப் பழி வாங்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஈரான் நீதிமன்றம் அனுமதி

Go down

பழிக்குப் பழி வாங்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஈரான் நீதிமன்றம் அனுமதி  Empty பழிக்குப் பழி வாங்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஈரான் நீதிமன்றம் அனுமதி

Post by முஸ்லிம் Mon May 16, 2011 3:59 pm

டெஹ்ரான்:ஆமினா என்ற 32 வயதான பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார் மாஜித் என்ற வாலிபர். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஆமினா பஹ்ரமியை பல தடவைகள் கெஞ்சியும் அவர் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்தே மாஜித் ஆமினாவின் முகத்தில் ஆஸிட்டை ஊற்றினார். இதனால் ஆமினாவின் தோற்றம் விகாரமாகியதுடன் ஒரு கண் பார்வையும் இழந்தார்.

ஆமினா பஹ்ரமியும் மற்றும் ஆஸிட் ஊற்றிய மாஜிதும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பயிலுபவர்கள். ஷரியத் சட்டத்தில் ஒன்றான பழிக்குப் பழி வாங்கும் உரிமையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குதல் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் 2004ல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், இச்சம்பவத்திற்கு பகரமாக £19,000 கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மாஜித்துக்கு சிறைத் தண்டனையும் வழங்கியது. ஆனால் இத்தீர்ப்பை அப்பெண் ஏற்காமல் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என கோரியதால் நீதிமன்றம் இச்சந்தர்பபத்தை பாதிக்கப்ட்ட அந்தப் பெண்ணுக்கு வழங்கியுள்ளது.

ஆமினாவுக்கு 19 ஆபேரேசன்கள் மேற்கொள்ளப்பட்டும் அவருக்கு கண் பார்வையோ அல்லது பழைய தோற்றமோ கிடைக்கவில்லை. பழிவாங்கத் துடிக்கும் ஆமினாவிடம் மாஜித்தின் தாயார் மன்றாடியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஆமினா தனது பிடிவாதத்தைக் கை விடவில்லை. மாஜித் தற்போது நோய்வாய்ப்பட்டு டெஹ்ரான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருந்தாலும் நீதிமன்ற உத்தரவின் படி அவரது இரு கண்களிலும் தலா 20 துளிகள் வீதம் ஆஸிட்டைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்திலேனும் ஆமினா மனம் மாறினால் இந்தத் தண்டனை இரத்தாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆறு வருடங்களின் பின் தனக்கு இப்போதாவது நீதி கிடைத்துள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஆமினா தெரிவித்துள்ளார். மிரட்டல்கள் காரணத்தினால் காவல்துறை வீதியில் தனியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்திவுள்ளாதாக கூறினார்

பழிக்குப் பழி வாங்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஈரான் நீதிமன்றம் அனுமதி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11141
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
»  இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு நிதியுதவி!
» புனித பயணம் ஹஜ்க்கு சென்ற பெண்ணுக்கு விமான நிலையத்தில் குழந்தை பிறந்தது
»  பாலஸ்தீன் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum