காஸ்ஸாவிற்கு புறப்பட்ட மலேசியா கப்பலை தாக்குவோம்-இஸ்ரேல் மிரட்டல்
Page 1 of 1

டெல்அவீவ்:காஸ்ஸாவிற்கு புறப்பட்ட மலேசிய கப்பல் காஸ்ஸாவின் கடற்கரைக்கு வந்தால் தாக்குவோம் என இஸ்ரேலின் கப்பற்படை மிரட்டல் விடுத்துள்ளது. கழிவு நீர் செல்வதற்கு தேவையான குழாய்களுடன் காஸ்ஸாவிற்கு வரும் எம்.வி.ஃபிஞ்ச் கப்பலுக்கு மிரட்டல் வந்துள்ளதாக பயணத்திற்கு தலைமை வகிக்கும் பெர்தானா க்ளோபல் பீஸ் பவுண்டேசனின் உறுப்பினர் ஷம்சுல் அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.
காஸ்ஸாவிலிருந்து 30 மைல்களுக்கு அப்பால் எகிப்து கடல் எல்லையில் தற்போது மலேசிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.இஸ்ரேல் கப்பற்படை கப்பலை சுற்றுவளைத்து அதன் மேல்பகுதியில் துப்பாக்கியால் சுட்டதாக தன்னார்வ குழுவில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர் அலாங் பெந்தாஹாரா தெரிவித்துள்ளார்.
மலேசியாவைச்சார்ந்த ஏழுபேர், இரண்டு அயர்லாந்து நாட்டவர், இரண்டு இந்தியர்கள், கனடாவைச்சார்ந்த ஒருவர், போர் எதிர்ப்பு ஆர்வலர், பத்திரிகையாளர் ஆகியோர் கப்பலில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.துருக்கி நிவாரண கப்பல்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய நினைவு தினத்தில் 25 நாடுகளின் பிரதிநிதிகளுடன் 15 கப்பல்களில் காஸ்ஸாவிற்கு செல்வோம் என ஃபலஸ்தீன் ஆதரவு இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான ஃப்ரீ காஸ்ஸா மூவ்மெண்ட் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி இஸ்ரேல் ராணுவம் துருக்கி நிவாரண கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி ஒன்பது தன்னார்வ தொண்டர்களை அநியாயமாக கொலைச்செய்தது. இந்த பயணத்தில் பெர்தானா க்ளோபல் பீஸ் பவுண்டேசனினும் இடம்பெற்றிருந்தது.

Similar topics
» காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது
» ஐரோப்பாவை தாக்குவோம்-மீண்டும் கத்தாஃபி முழக்கம்
» ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மீண்டும் காஸ்ஸாவிற்கு:குழுவில் அமெரிக்கர்களும் இடம்பெற்றுள்ளனர்
» காஸ்ஸா பிரதமர் ஹானிய்யா மாவி மர்மரா கப்பலை பார்வையிட்டார்
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum