ஆக்கிரமிப்பு இராணுவத் தாக்குதலில் 9 பலஸ்தீனர்கள் படுகாயம்
Page 1 of 1

கடந்த வெள்ளிக்கிழமை (20.05.2011) இரவில் அஸீரா அல் கபாலிய்யா கிராமத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் பலஸ்தீன் பொதுமக்கள் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேற்படி கிராமத்தை அடுத்துள்ள 'யிட்ஸார்' எனும் யூத ஆக்கிரமிப்பாளர்களின் குடியேற்றத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அக்கிராமத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்துப் பெரும் தாக்குதல் நடாத்தியபோது, பலஸ்தீன் கிராமவாசிகள் தற்காப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். இதனையடுத்து அன்றிரவு அக்கிராமத்தினுள் நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் பலஸ்தீன் பொதுமக்களை நோக்கித் தாறுமாறாகத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
"ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகளின் இத்தகைய அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கைகள் அடிக்கடி இடம்பெறுவதும், அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பலஸ்தீன் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதும் சர்வசாதாரணமாக இடம்பெறுவது வழக்கம்" எனத் தெரிவித்த உள்ளூர்வாசிகள், வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினால் படுகாயமுற்ற பலஸ்தீனர்களுக்குக் கிராமவாசிகளால் ஸ்தலத்திலேயே முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நேரம்

Similar topics
» மே 2011: ஆக்கிரமிப்பு இராணுவத்தால் 370 பலஸ்தீனர்கள் கைது
» ஆக்கிரமிப்புப்படைத் தாக்குதலில் மூன்று பலஸ்தீன் மீனவர் படுகாயம்
» பாகிஸ்தானுக்குள் அமெரிக்க உளவுப்படையினர் அத்துமீறி பிரவேசித்ததாக பாக். இராணுவத் தளபதி கண்டனம்
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
» மத்திய காஸாவில் இஸ்ரேலிய அடாவடி: சிறுவன் படுகாயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum