பாகிஸ்தானுக்குள் அமெரிக்க உளவுப்படையினர் அத்துமீறி பிரவேசித்ததாக பாக். இராணுவத் தளபதி கண்டனம்
Page 1 of 1

இனிமேல் பாகிஸ்தானுக்குள் எமது அனுமதியின்றி அமெரிக்க இராணுவம் சட்டவிரோதமாக புகுந்து அதிரடித் தாக்குதல்களை நடத்தினால், நாம் அமெரிக்க விமானங்களை சுட்டுவீழ்த்துவோமென்று பாகிஸ்தான் இராணுவத்தளபதி அஷ்பக் கயானி எச்சரிக்கை செய்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் தங்கள் நாடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தையும் மீளாய்வு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கியிருக்கிறதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானுக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்துள்ள அமெரிக்க உளவுப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டமை குறித்தே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தங்கள் நாட்டின் கொமாண்டோ படையினர் பாகிஸ்தானில் கடந்த ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், பின்லேடனின் மறைவு அல்கொய்தா இயக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார்.
இதேவேளை பாகிஸ்தானில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அந்நாட்டின் இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாஅதே இஸ்லாமி அமெரிக்கா இந்த தான்தோன்றித் தனமான தாக்குலினால் பாகிஸ்தானின் இறைமையை அவமதித்திருக்கிறதென்றும், அதனால் பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க கூடாதென்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதே வேளையில் பாகிஸ்தான் இராணுவம் உலகின் மிகப் பிரபல்யம் பெற்ற பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தங்கள் இராணுவத்தினரால் உயிரோடு கண்டுபிடிக்க முடியாமல் போனமை தொடர்பாக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
இந்நேரம்

Similar topics
» ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்
» அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்
» ‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum