தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மம்தாவின் காபினெட்டில் 6 முஸ்லிம்களுக்கு இடம்

Go down

மம்தாவின் காபினெட்டில் 6 முஸ்லிம்களுக்கு இடம்  Empty மம்தாவின் காபினெட்டில் 6 முஸ்லிம்களுக்கு இடம்

Post by முஸ்லிம் Sun May 22, 2011 3:00 pm

கல்கத்தா: மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தின் முதல் பெண் முதலமைச்சராக கடந்த வெள்ளிக்கிழமை பத்தி ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 34 வருடங்களாக ஆட்சிக்கட்டிலில் அமர்திருந்த இடது சாரியை தோற்கடித்து அவர் அரசு அமைத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

43 உறுப்பினர்களை கொண்ட காபினெட்டில் மம்தாவின் கட்சியை சேர்ந்த 5 முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர். மம்தாவின் பதவி ஏற்பு விழாவில் முன்னால் மேற்கு வாங்க முதல்வர் புத்ததேப் பட்டாச்சாரியா,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட ஆயிரகணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

மம்தாவின் அமைச்சரவை 43 பேர்களை கொண்டது. இதில் மம்தாவின் திரினாமுல் காங்கிரசை சேர்ந்த 36 பேறும் காங்கிரசை சேர்ந்த 2 பேரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மம்தாவின் காபினெட்டில் அவருடைய கட்சியை சேர்ந்த ஹைதர் அசீஸ் சப்வி,ஜாவித் அஹ்மத் கான்,அப்துல் கரீம் சௌத்ரி,பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் நூற் ஆலம் சௌத்ரி ஆகியோரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அபு ஹெனா உட்பட இரண்டு பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து இன்னும் பதவி ஏற்கவில்லை. எனவே பதவி ஏற்றுக்கொண்ட 38 பேரில் ஆறு முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் திரினாமுல் காங்கிரசை சேர்ந்த 25 உறுப்பினர்களும் மற்றும் காங்கிரசை சேர்ந்த 15 உறுப்பினர்கள் உட்பட 59 உறுப்பினர்கள் முஸ்லிம்கள் ஆவர்.சென்றமுறை இடது சாரி ஆட்சியின் போது மொத்தம் 46 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் அதில் 34 பேர் இடது சாரிகள் ஆவர். நடந்து முடிந்த தேர்தலில் மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ் 226 இடங்களையும் இடதுசாரி 61 இடங்களை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

மம்தாவும் அவருடைய சகாக்களும் கடந்த வெள்ளியன்று கல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் நண்பகல் 1 :01 க்கு பதவி ஏற்றுக்கொண்டனர்.எனினும் அந்த சமயத்தில் மம்தாவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை செலுத்திய முஸ்லிம் சமுதாயம் தங்களுடை ஜும்மா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததால் அந்நிகழ்ச்சியை காண இயலவில்லை என்பது வருத்திற்குரியதே.

மம்தாவின் காபினெட்டில் 6 முஸ்லிம்களுக்கு இடம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த இடம் தேடி .................... !
» ஹைதராபாத்:பொறியியலுக்​கான பொது நுழைவுத் தே​ர்வில் முதல் இடம் பிடித்த செயீத் ஷதாப்
» யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!
» தேடப்படும் குற்றவாளிகள்:மரணித்தவர்களும் பட்டியலில் இடம் பிடித்த அதிசயம்
» கோயில் இடம் யாருக்கு?:வழக்கில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum