தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது வெறித்தாக்குதல்!

Go down

அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது வெறித்தாக்குதல்!  Empty அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது வெறித்தாக்குதல்!

Post by முஸ்லிம் Fri May 27, 2011 4:06 pm

ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் உரையின் போது இடைமறித்துக் கேள்வி எழுப்பினார் என்ற ஒரே காரணத்தினால் அமெரிக்கப் பெண் செயற்பாட்டாளர் மீது ஸியோனிஸத் தீவிரவாதிகள் வெறித்தனமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



நெத்தன்யாஹூ தன்னுடைய உரையில், 'பலஸ்தீனர்களும் சரிசமமான அரசியல் உரிமைகளை அனுபவிக்கும் வகையில் 1967 ஆம் ஆண்டுக்கான எல்லைகளை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தான் கைப்பற்றிய பலஸ்தீன் நிலங்களைப் பலஸ்தீனரிடம் திரும்பக் கையளிக்க வேண்டும் என்று கூறப்படுவது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்' என்ற கருத்துப்படப் பேசியபோது, அவரது கருத்தை இடைமறித்து கோட்பிங்க் (Codepink) எனும் சமாதானத்துக்கான பெண்கள் குழுமத்தின் உறுப்பினரான ரே எபிலியா, "உண்மைதான் ஆக்கிரமிப்பு என்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தான். எனவே, உங்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இனியும் வேண்டாம். போர்க் குற்றங்களை உடனே நிறுத்துங்கள். பலஸ்தீனர்களுக்கு சரிசமமான உரிமைகளை வழங்குங்கள்" என்று உரத்த குரலில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அரங்கில் பார்வையாளர்களாக இருந்த ஸியோனிஸ ஆதரவாளர்கள் பலர் கொதித்தெழுந்து எபிலியாவை மிருகத்தனமாகத் தாக்கத் தொடங்கினர். அமெரிக்கக் காவல்துறையினர் அவரை அங்கிருந்து இழுத்துக் கொண்டுவந்து வெளியே தள்ளினர். ஸியோனிஸ ஆதரவாளர்களால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த எபிலியா ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலின்போது அவரது கழுத்து மற்றும் தோள்கள் மிக மோசமாகக் காயமடைந்திருந்தன. சிகிச்சையளிக்கப்பட்டதன் பின் அவர் அமெரிக்கக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ, "இத்தகைய சுதந்திரமான நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற முழுமையான ஜனநாயக நாடுகளிலேயே சாத்தியமாகின்றன" என்று கூறியுள்ளார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11140
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அரபு பா.உ. மீது தண்ணீரை வீசிய இஸ்ரேலியப் பெண் பா.உ.
» இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!
» போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்
» கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum