முஸ்லிம் சிறுமி கொலை:விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

லக்னோ:உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் போலீஸ் ஸ்டேசனில் பதினான்கு வயது முஸ்லிம் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அலகபாத் உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி அப்பகுதியை சார்ந்த வழக்கறிஞர் சமர்ப்பித்த பொதுநல வழக்கை பரிசீலிக்கவே நீதிபதிகளான எஸ்.என்.சுங்கனு, டி.கே.அரோரா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
முஸ்லிம் சிறுமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து இத்தொகையை ஈட்ட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவத்தைக் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், ஐந்து தினங்களுக்குள் அறிக்கை கிடைக்கும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜோதிந்திர மிஷ்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.பி. டி.கே.ராயை உ.பி.முதல்வர் மாயாவதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தயார் என்றாலும், நொய்டா அருகே சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து குழப்பியதைப் போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என கருதுவதாக மாயாவதி தெரிவித்தார்.
அதேவேளையில் முதல் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை போலீஸ் தவறாக சித்தரித்துள்ளது என இச்சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டரான எ.கெ.அகர்வால் கூறினார். சிறுமியின் கழுத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அறிக்கையை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

Similar topics
» குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி
» பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
» நரோடா பாட்டியா:உயர் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
» மால்கம் எக்ஸ் கொலை:வாழ்க்கை வரலாறு புதிய விசாரணை வழி வகுக்கிறது
» ஷார்ஜா:கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க 3.4 மில்லியன் திர்ஹம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum