குஜராத் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணையை துவக்க அனுமதி
Page 1 of 1

புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு குஜராத் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை துவக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதியான முறையில் விசாரணை நடைபெறுவதற்கு வழக்கை குஜராத்திற்கு வெளியே நடத்த வேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை துவக்க அனுமதி அளித்துள்ளது.
நீதியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தால் குற்றஞ்சாட்டப்பட்டோர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிமன்ற பெஞ்ச் தெரிவித்தது. விசாரணையை குஜராத்திற்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. 2006-ஜூன் மாதம் 26-ஆம் தேதி அஹ்மதாபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
69 முஸ்லிம்கள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை துவங்கவிருக்கவே, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு இதர பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதை சுட்டிக்காட்டி மும்பையை சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல்வாட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குண்டுவெடிப்பின் சதித்திட்டத்தில் பங்கேற்றார்கள் என்பது முதல்நோக்கு (prima facie) உண்மைகளுக்கு பொருந்தாதது எனவும், வழக்கு இட்டுக்கட்டப்பட்டது எனவும் டீஸ்டா தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க ஆளும் மாநிலமான குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதியான விசாரணை நடக்காது என சுட்டிக்காட்டி 2009 பெப்ருவரி மாதம் வழக்கு மாநிலத்திலிருந்து வெளியே மாற்ற வேண்டும் என இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மனு அளித்திருந்தனர்.

Similar topics
» இஷ்ரத் வழக்கு:ஒரு மாதத்திற்குள் விசாரணையை பூர்த்திச் செய்யவேண்டும்
» மலேகான் குண்டுவெடிப்பு:விசாரணையை திசை திருப்ப ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் வேடமிட்டனர்
» குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி
» 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உச்சநீதிமன்ற மேல் முறையீடு மனு மீதான விசாரணை தொடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum