எதையும் சாதிக்காத நிதிஷ்குமார் அரசு:லாலு பிரசாத் யாதவ் கண்டனம்
Page 1 of 1

பாட்னா: பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எதையுமே சாதிக்கவில்லை என்று சாடினார் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்.
அவருடைய கட்சி சார்பில் தலைநகர் பாட்னாவில் மகா தர்ணா கிளர்ச்சி சனிக்கிழமை நடந்தது. அப்போது தொண்டர்களிடம் பேசிய லாலு பிறகு நிருபர்களிடமும் பேசினார்.
அவருடைய கருத்துகள் வருமாறு:
நிதீஷ்குமார் தலைமையிலான அரசில் பீகார் பெரிய முன்னேற்றம் அடைந்து வருவதாக தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.
இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்து தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு சாதனையையும் செய்யவில்லை.
பள்ளிக்கூட மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டம்கூட மத்திய அரசின் திட்டம்தான். பீகாரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தாராள மனதோடு தரும் மானிய உதவிகளில்தான் இந்த அரசு குளிர்காய்கிறது.
பீகாரில் பொது விநியோக திட்டம் படுத்துவிட்டது. ரேஷனில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. கெரசினை மத்திய தொகுப்பிலிருந்து வாங்காமல் அப்படியே வீணடிக்கிறது.
கிராமங்கள் வழியாக மின்சாரம் சென்றாலும் விநியோகத்துக்கான அமைப்பு இல்லாததால் 94% கிராமங்களில் மின்சாரப் பயன்பாடே இல்லை. நபர்வாரி வருமானத்தில் நாட்டிலேயே கடைசி இடத்தில் இருப்பது பிகார்தான்.
சட்டம், ஒழுங்கு நிலைமையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஊழலைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் கொடிகட்டிப் பறக்கின்றன. விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாது. பியாடா நிலங்களை ஆளும் கூட்டணிக் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன.
நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது 65,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களை பீகார் மாநிலத்துக்காகக் கொண்டு வந்தேன். இப்போது அதைப்போன்ற திட்டங்கள் ஏதும் இல்லை.
இந்த அரசு தன்னுடைய முழு பதவிக்காலத்தையும் முடிக்கட்டும் என்று காத்திராமல் மக்களைத் திரட்டி தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி நாம் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார் லாலு பிரசாத்.

Similar topics
» பீகார் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் ஒன்று சேருங்கள்: லாலு
» ’எனது தந்தையை விடுதலைச்செய்யும் நாளே எனக்கு சுதந்திரதினம்’ – த்ருதி பிரசாத் மஹாடோ
» குவைத் அரசு ராஜினாமா
» ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
» உஸாமா கொலை:ஹமாஸ் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum