தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆப்கன் அதிபர் ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை: ஹக்கானி குழு மறுப்பு

Go down

ஆப்கன் அதிபர் ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை: ஹக்கானி குழு மறுப்பு Empty ஆப்கன் அதிபர் ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை: ஹக்கானி குழு மறுப்பு

Post by முஸ்லிம் Tue Oct 04, 2011 3:55 pm

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலைக்கும் எங்களுக்கும்
தொடர்பில்லை என ஹக்கானி குழுவின் முக்கிய தலைவரான சிராஜூதின் ஹக்கானி
தெரிவித்துள்ளார்.ஆப்கன் முன்னாள் அதிபர் பர்ஹனுதீன் ரப்பானியின்
படுகொலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹக்கானி குழுவிற்குத்
தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூறி வந்தது.

அதேபோல் பாகிஸ்தானி ஒருவர் தான் ரப்பானியைக் கொலை செய்தார் என சமீபத்தில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் குற்றம்சாட்டினார்.

ஹக்கானி குழுவிற்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் இடையிலான தொடர்பு குறித்த
குற்றச்சாட்டுகளால் சமீபத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கல்
ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கன், பாகிஸ்தான் உறவிலும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹக்கானி குழுவின் முக்கிய தலைவரான சிராஜூதின் ஹக்கானி
நேற்று பி.பி.சி செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கூறியதாவது: ரப்பானியை
நாங்கள் கொலை செய்யவில்லை. இதை எங்கள் செய்தித் தொடர்பாளர்கள் பல முறை
உறுதி செய்துள்ளனர்.

அதேபோல் அமெரிக்கா குற்றம்சாட்டுவது போல எங்களுக்கும் ஐ.எஸ்.ஐ.க்கும்
எவ்வித தொடர்பும் கிடையாது. இவை அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் அரசியல்
விளையாட்டு. விரைவில் இது முடிவுக்கு கொண்டு வரப்படும்.

கடந்த 1980களில் சோவியத் படைகள் ஆப்கனுக்குள் ஊடுருவிய போது நாங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருந்தோம்.

ஆனால் அமெரிக்கப் படைகள் வந்த பின் அந்தத் தொடர்பை தொடரவில்லை. ஆப்கனில்
பெற்ற தோல்வியை மறைக்கத்தான் அமெரிக்கா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அள்ளி
வீசுகிறது.


ஆப்கன் அதிபர் ரப்பானியை நாங்கள் கொலை செய்யவில்லை: ஹக்கானி குழு மறுப்பு Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11139
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கர்களை சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்ய ரகசிய குழு ஆணையிட முடியும் – வெள்ளை மாளிகை
» ஹக்கானி குழுவுடன் அமெரிக்கா நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை
» குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி
» நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை - அமெரிக்கா கைவிரிப்பு
» ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum