தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

Go down

ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் திட்டவட்டம் Empty ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

Post by முஸ்லிம் Sun Oct 09, 2011 1:25 pm

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான உறவையே விரும்புவதாகவும், ஹக்கானி
பயங்கரவாதிகள் மீது ராணுவ நடவடிக்கை இல்லை என்றும் பாகிஸ்தான் திட்டவட்டமாக
தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான வட வஜ்ரிஸ்தானில் பழங்குடி அதிகம் வசித்து வருகின்றனர். அங்குதான் தலிபான்களின் தலைமையகம் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்த அவர்களுக்கு ஹக்கானி
பயங்கரவாதிகள் உதவி வருகின்றனர் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.

ஹக்கானி பயங்கரவாதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானின்
உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி
வருகிறது.

ஹக்கானி பயங்கரவாதிகளுடனான உறவை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்ள வேண்டும்
என்று அண்மையில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்
பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ராவல்பிண்டியில்
வெள்ளிக்கிழமை ராணுவ தளபதி ஜெனரல் அஸ்பாக் பர்வேஸ் கயானி தலைமையில்
நடைபெற்றது.

அமெரிக்காவுடனான உறவை தொடர விரும்புவதாகவும் அதற்கு தடையாக உள்ள
முட்டுக்கட்டைகள் படிப்படியாக அகற்றுவதும் என்றும் அக்கூட்டத்தில் முடி
வெடுக்கப்பட்டது.

ஹக்கானி பயங்கரவாதிகள் குறித்த அமெரிக்காவின் கவலையை போக்கும் வழியில்
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தீர்மானிக்கப்பட்டதாகத்
தெரிகிறது.

“ஹக்கானி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான உறவை
விரும்புகிறோம். அதே சமயம் வட வஜ்ரிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவ
தாக்குதலை நடத்த மாட்டோம்” என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து பிரச்னைகளுக்கும் ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என ராணுவ அதிகாரி
ஒருவர் கூறினார். சில தினங்களுக்கு முன் சௌதி அரேபியாவுடன் இணைந்து
பாகிஸ்தான் ராணுவ பயிற்சியை மேற்கொண்டது.

அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி பிரச்னைகளுக்கு தீர்வு காண ராணுவ
நடவடிக்கை சிறந்த முறையாகாது என குறிப்பிட்டார். ஹக்கானி பயங்கரவாதிகள்
மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் கயானியின்
இக்கருத்து பாகிஸ்தான் அதன் நிலையில் உறுதியாக உள்ளது என்பதை காட்டுவதாக
அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஹக்கானி பயங்கரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கைகக்கு பதிலாக என்ன மாற்றுவழிகள் உள்ளன என்பதை பாகிஸ்தான் தெளிவுபடுத்தவில்லை.

எங்களுக்கென சில தேசிய நலன்கள் உள்ளன. சில வரம்புகள் உள்ளன. அவற்றில்
நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை
அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான
முக்கிய ஒப்பந்தத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து பாகிஸ்தான்
ராணுவ அதிகாரிகள் விவாதித்தாக தெரிகிறது.

ராணுவத்தினரின் திறமையை மேம்படுத்தும் முறைகள் குறித்து அதில்
விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மாதந்தோறும்
நடைபெறும் ஆய்வு கூட்டம்தான் என்று ராணுவ செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானுக்கான அமெரிக்கா தூதர் கெமரூன் முன்டர் பாகிஸ்தான்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி காரை வெள்ளிக்கிழமை சந்தித்துப்
பேசினார்.

இரு தரப்பு உறவு குறித்தும், பிராந்திய பிரச்னைகள் குறித்தும் அவர்கள்
கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹக்கானி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் திட்டவட்டம் Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11139
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிரடி நடவடிக்கை-அமெரிக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஈரானிய பாராளுமன்றம் முடிவு
» இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – கொல்லப்பட்ட ஜாவேதின் தந்தை கோரிக்கை
» அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மனு தள்ளுபடி
» உஸாமா:அமெரிக்கா மீது பழி சுமத்தும் பாகிஸ்தான்
» ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum