இந்திய வல்லுநர் கண்டுபிடித்த அதிவேக கம்ப்யூட்டர் சிப்
Page 1 of 1

வாஷிங்டன்:இந்தியாவின் கோராக்பூர்
ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவரும், அமெரிக்கா வாழ் இந்தியருமான ராஜ்தத் அதிவேக
கம்ப்யூட்டர் சிப்பை கண்டுபிடித்துள்ளார்.
தற்போதைய கம்ப்யூட்டர்களில் இருக்கும்
சிப்களைவிட இந்த சிப் 60 சதவீதம் வேகமாக இயங்கும். இந்த சிப்பை
பயன்படுத்தினால், இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும்
குறையும்.
ஐபிக் கார்ப், ஃபோட்டோனிக் கார்ப் ஆகிய
நிறுவனங்களின் சேர்மனும், சி.இ.ஓவுமான ராஜ்தத்தின் இக்கண்டுபிடிப்பு
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது.
அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும்
ராஜ்தத் இது குறித்துக் கூறியதாவது: ‘கம்ப்யூட்டர் சிப்களில் இப்போது
எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக எடை குறைந்த
போட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரப்
பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளது. எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால், சிப்கள்
சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம்
செலவாகிறது.
அத்துடன் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக
தனியாக பாகங்களைப் பொருத்த வேண்டும. இதனால் அளவும், எடையும் கூடும். ஆனால்
போட்டான் வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. எனவே பெருமளவில் மின்சாரம்
சேமிக்கப்படும். மேலும் இந்த சிப்கள் சிறிய அளவிலேயே இருக்கும். எடையும்
குறைவு. இந்த கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர், பாதுகாப்புத் துறைக்கு
பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
முன்னதாக சமீபத்தில் அமெரிக்கா வந்த
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜ் தத் வாஷிங்டனில் சந்தித்து
தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கினார்.
ராஜ் தத்துக்கும், அவரது நிறுவனத்துக்கும் பென்டகன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

Similar topics
» உலகிலேயே அதிவேக இரயில் சேவை தொடக்கம்!
» இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்
» இந்திய தூதருக்குச் சவூதியில் வரவேற்பு!
» இந்திய வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம்
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum