எகிப்து:26 பேர் பலி
Page 1 of 1
எகிப்து:26 பேர் பலி
கெய்ரோ:எகிப்து நாட்டின் தலைநகரான
கெய்ரோவில் ராணுவமும், காப்டிக் கிறிஸ்தவர்களும் மோதியதில் 26 பேர்
கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அஸ்வான் மாகாணத்தில் கிறிஸ்தவ சர்ச்சின்
மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
தொடர்ந்து நடந்த மோதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்பொழுதும் தொடரும்
வன்முறை கெய்ரோவை கலவர களமாக மாற்றியுள்ளது.
ராணுவ ஆட்சியாளர்கள் நிலைமையை ஆராய அவசர
கூட்டம் நடத்திவருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை தேவை என ராணுவ
கவுன்சில் கூறியுள்ளது.
நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட அனைத்து
பிரிவினரும் ஒத்துழைக்க வேண்டும் என எகிப்தின் பிரதமர் எஸ்ஸாம் ஷரஃப்
கோரிக்கை விடுத்துள்ளார். நகரத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ்
பெற்றபோதிலும் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
சர்ச் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது
செய்ய எகிப்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி காப்டிக்
கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏராளமான
அரசு-ராணுவ வாகனங்களை தீவைத்துக் கொளுத்தினர். கெய்ரோவில் தேசிய
தொலைக்காட்சி நிலையம் மீது கல்வீசி தாக்கினர். போராட்டக்காரர்களுடன்
ஏராளமான முஸ்லிம்களும் சேர்ந்ததை தொடர்ந்து போராட்டம் வலுவடைந்தது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வடக்கு கெய்ரோவின் சுப்ரா
மாவட்டத்திலிருந்து போராட்டத்தை துவக்கிய போதிலும் பின்னர் அது தஹ்ரீர்
சதுக்கத்தை நோக்கி பரவியது.
ஹுஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்ட பிறகு எகிப்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமாக இதனை பி.பி.சி வர்ணிக்கிறது.
இதற்கிடையே போராட்டம் கிறிஸ்தவ சர்ச்சை
தாக்கியதை தொடர்ந்து ஏற்பட்டிருந்தாலும் ராணுவ ஆட்சியாளர்கள் மீதான
கோபம்தான் அதில் பிரதிபலிக்கிறது என அல்ஜஸீரா கூறுகிறது. ஆனால்,
இப்போராட்டம் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு பாதிப்பை
ஏற்படுத்தாது என பிரதமர் எஸ்ஸாம் ஷரஃப் தெரிவித்துள்ளார்.

Similar topics
» எகிப்து பாராளுமன்றம் கூடியது
» ஈரான்-எகிப்து உறவு வலுப்பெறுகிறது
» எகிப்து:வாக்குப் பதிவில் சாதனை
» எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா
» எகிப்து: அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum