யெமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவ்லாகியின் மகன் உள்பட7 பேர் மரணம்
Page 1 of 1

ஸன்ஆ:அமெரிக்க குடிமகனும், யெமன்
வம்சாவழியைச் சார்ந்தவருமான அறிஞர் அன்வர் அவ்லாகியின் மகன் உள்பட7 பேர்
அமெரிக்கா நடத்திய இரட்டை விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில்
அன்வார் அவ்லாகியின் மகன் அப்துற்றஹ்மான் அவ்லாகி (வயது21), அல்காயிதாவின்
ஊடக தலைவராக கருதப்படும் இப்ராஹீம் அல் பன்னா உள்பட7 பேர் கொல்லப்பட்டதாக
யெமனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்கு யெமனில் அல்காயிதாவின் ஆதிக்கம்
நிறைந்த பகுதியாக கருதப்படும் ஸப்வா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு
அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவின் தேடுதல் பட்டியலில்
பன்னாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவ்வருடம் ஜனவரியில் பன்னா
கொல்லப்பட்டதாக யெமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலைத்
தொடர்ந்து போராளிகள் அப்பகுதியில் சமையல் எரிவாயு குழாயை தகர்த்தனர்.
நாட்டின் மிகப்பெரிய தொழில் திட்டங்களில் ஒன்றான பிரான்சு எண்ணெய்
நிறுவனங்களுக்கு சொந்தமான பைப்லைனைத்தான் போராளிகள் தகர்த்துள்ளனர். பல
கிலோமீட்டர் தூரம் வரை பைப்பிலிருந்து கிளம்பிய தீ ஜுவாலைகளை கண்டதாக
நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே அன்வர் அவ்லாகி கடந்த மாதம்
நடந்த விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்
பதவி விலகக்கோரி யெமனில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன.
போராட்டத்திற்கிடையே ராணுவம் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12
பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஸன்ஆவில் ஸாலிஹின்
ராஜினாமாவைக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் எவ்வித
பிரச்சனையுமில்லாமலே பேரணி மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதாக மனித
உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில்
ராணுவமும்-எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டனர்.

Similar topics
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
» கடாபியின் மகன் கூட்டுப்படை தாக்குதலில் இறந்துவிட்டார்?
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
» தாலிபான் தாக்குதலில் பிரான்ஸ் ராணுவத்தினர் 20 பேர் பலி!
» ஹக்கானி குழுவுடன் அமெரிக்கா நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum