யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
Page 1 of 1

வாஷிங்டன்:அரசியல் நெருக்கடி தொடரும் யெமன் நாட்டில் விமானத்தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா துவக்கியுள்ளது.
போராளி குழுக்களின் ஒருங்கிணைப்பை அழித்தொழிப்பதுதான் இத்தாக்குதலின் நோக்கம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.அமெரிக்க ஆளில்லா விமானங்களும்(ட்ரோன்கள்), போர் விமானங்களும் கடந்த வாரங்களில் தெற்கு யெமனில் தாக்குதல் நடத்தியிருந்தன.
அமெரிக்க குடிமகனும், இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அன்வர் அவ்லாக்கியை கொலைச்செய்ய கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய முயற்சி தோல்வியை தழுவியது.
கடந்த வெள்ளிக்கிழமை அல்காயிதாவின் நடுநிலை தலைவர்களில் ஒருவரான அபூஅலி அல்ஹரீதியை தாக்குதலில் கொன்றதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் திரைமறைவில் அல்காயிதா தீவிரமான அடித்தளத்தை உருவாக்க முயல்வதாக அமெரிக்க ராணுவ தலைவர் மைக்கல் முல்லன் குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு பகுதியில் பதிலடி வலுவடைந்ததை தொடர்ந்து யெமன் ராணுவம் ஸன்ஆவிற்கு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பழங்குடி இன போராளிகள் நடத்திய தாக்குதலி அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு காயம் ஏற்பட்டு அவருடைய மாளிகை தகர்ந்துபோனது. ஸாலிஹிற்கு ஏற்பட்ட கடுமையான காயத்திற்கு அவர் தற்போது சவூதி அரேபியாவில் சிகிட்சையில் உள்ளார்.
பயங்கரவாதத்திற்கு(?) எதிராக போர் நடத்திவருவதாக கூறும் அமெரிக்காவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ஆவார்.
2009 ஆம் ஆண்டு யெமனில் அல்காயிதாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையை துவக்கும் என அறிவித்த ஸாலிஹ் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனால், அரசு எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்துள்ள சூழலில் போராளிகளை கண்டறிந்து தாக்குதல் நடத்துவது சிரமமான காரியம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

Similar topics
» ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» யெமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவ்லாகியின் மகன் உள்பட7 பேர் மரணம்
» இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு - ஆய்வு நடத்த மத்திய அரசு திட்டம்
» வளைகுடாவில் ராணுவ இருப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum