இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்தை அங்கீகரிக்க முடியாது – ஐ.நா
Page 1 of 1

ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில்
கிழக்கு ஜெருசலத்தில் 2600 சட்டவிரோத குடியேற்ற மையங்களை நிர்மாணிக்கும்
இஸ்ரேலின் நடவடிக்கையை அங்கீகரிக்க இயலாது என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ
மூன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஜெருசலத்தில் குடியிருப்பு
மையங்களை அதிகரிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையில் கடுமையான கவலை உண்டு என
பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஃபலஸ்தீன்- இஸ்ரேல் பேச்சுவார்த்தை
மீண்டும் துவங்குவதற்கு சர்வதேச அளவில் முயற்சி நடக்கும் வேளையில்
சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்தை ஒருவிதத்திலும் அங்கீகரிக்க இயலாது
எனவும், இது உணர்ச்சியைத் தூண்டுவதாகும் என ஐ.நா பொதுச் செயலாளரின்
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
‘பீஸ் நவ்’தான் கிழக்கு ஜெருசலமில்
குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் நகர திட்டப் பிரிவு அனுமதி
வழங்கிவிட்டதாக செய்தி வெளியிட்டது. இது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் என
பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலுக்கு நினைவூட்டினார்.
ஐ.நா அங்கீகாரம் கோரி ஃபலஸ்தீன்
ஆட்சியாளர்கள் ஐ.நாவுக்கு மனு அளித்த சூழலில்தான் சட்டவிரோத குடியிருப்பு
மையங்களை கட்டும் திட்டத்திற்கு இஸ்ரேல் வலுவூட்டியது. இஸ்ரேல் நடவடிக்கை
மூலமாக ஃபலஸ்தீன்- இஸ்ரேல் பேச்சுவார்த்தை ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டுவதை நிறுத்தாத வரை சமாதான
பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் அறிவித்துள்ளது.

Similar topics
» 1967 எல்லையை அங்கீகரிக்க முடியாது-நெதன்யாகு பிடிவாதம்
» குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்
» ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு
» பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை
» இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் – துனீசியா அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum