1967 எல்லையை அங்கீகரிக்க முடியாது-நெதன்யாகு பிடிவாதம்
Page 1 of 1

வாஷிங்டன்:இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காண 1967-ஆம் ஆண்டின் எல்லையை கணக்கிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த இயலாது என இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
1967-ஆம் ஆண்டு எல்லையை நியாயப்படுத்த முடியாது என திங்கட்கிழமையன்று அமெரிக்க இஸ்ரேலிய அலுவல்கள் பொதுச்சபை மாநாட்டில் (AIPAC) உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.
1967-ஆம் ஆண்டைய எல்லையின் அடிப்படையில் இருநாடுகளும் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த அறிவுரையை அன்றே மறுத்த நெதன்யாகு நேற்று மீண்டும் அதனை தொடர்ந்து வலியுறுத்தினார். ஃபலஸ்தீனர்கள் யூத நாட்டை அங்கீகரிக்காதது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என நெதன்யாகு குற்றஞ்சாட்டுகிறார்.
அதேவேளையில், அரசியல் தீர்வை நெதன்யாகு விரும்பவில்லை என்பதையே அவரது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என ஃபலஸ்தீன் விடுதலை இயக்க நிர்வாக குழு பொது செயலாளர் யாஸிர் ஆபித் ரபாஹ் தெரிவித்துள்ளார். 1967-ஆம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலம் மற்றும் மேற்குகரையின் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தது.

Similar topics
» இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு நிர்மாணத்தை அங்கீகரிக்க முடியாது – ஐ.நா
» நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிரி-பலஸ்தீன் தலைவர்கள் குற்றச்சாட்டு
» காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல: பாகிஸ்தான் பிடிவாதம்
» காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து!
» எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சிறுவர்களை ராணுவம் பத்திரமாக அனுப்பி வைத்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum