ஆப்கான்:தாலிபான் தாக்குதலில் 16 நேட்டோ ராணுவத்தினர் பலி
Page 1 of 1

காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில்
அமெரிக்க ராணுவத்தினர் பயணித்த பேருந்து மீது தாலிபான் நடத்திய தாக்குதலில்
13 அமெரிக்கர்கள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பேருந்து மீது
வெடிப்பொருட்கள் நிரப்பிய கார் மோதி இக்குண்டுவெடிப்பு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் விளைவாக பேருந்து
முற்றிலும் நாசமடைந்தது. மேற்கு காபூலின் தாருல் அமான் மாளிகைக்கு அருகில்
இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு ஆப்கானிஸ்தான் போலீஸ் அதிகாரியும், மூன்று
சிவிலியன்களும் இதர நான்குபேர்களாவர்.
நேட்டோ ராணுவ தளத்திலிருந்து காபூல்
மிலிட்டரி ட்ரெயினிங் செண்டரை நோக்கி பலத்த பாதுகாப்புட
சென்றுக்கொண்டிருந்த ரினோ பேருந்து மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்து அவ்விடத்தை தாண்டிச்செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு காருடன்
வந்த தாலிபான் போராளி தாக்குதல் நடத்த காத்திருந்ததாக உள்துறை அமைச்சக
செய்தித்தொடர்பாளர் சித்தீக் சித்தீக்கியை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி
வெளியிட்டுள்ளது.
நேட்டோ ஹெலிகாப்டரில் இறந்த உடல்கள் சம்பவ
இடத்திலிருந்து மாற்றப்பட்டன.தாக்குதலுக்கான பொறுப்பை தாலிபான்
ஏற்றுக்கொண்டது. அமெரிக்க ராணுவம் பயணித்த பேருந்து மீது கார் குண்டு
தாக்குதல் நடத்தியதாக தாலிபானின் செய்தித்தொடர்பாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித்
எ.எஃப்.பிக்கு அளித்த எஸ்.எம்.எஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலை பின்னர் நேட்டோ செய்தித்தொடர்பாளரும் உறுதிச்செய்துள்ளார்.
சக்தி மிகுந்த குண்டுவெடிப்பு இங்கு
நிகழ்ந்ததாகவும், அரை கிலோமீட்டர் வரையிலான இடத்தல் உள்ள கட்டிடங்கள்
சேதமடைந்ததாகவும், நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பலத்த பாதுகாப்பு
நிறைந்த பகுதியில் மதியம் நடந்த தாக்குதல் ஆக்கிரமிப்பு ராணுவத்தினரை
நடுங்கச்செய்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும்
ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் நேட்டோ படையினருக்கு
ஏற்பட்ட பலத்த இழப்புகளில் இதுவும் ஒன்றாகும்.கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க
ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 30 அமெரிக்க ராணுவத்தினரை தாலிபான்
கொன்றது.
தெற்கு ஆப்கானிஸ்தானில் உரூஸ்கான்
பகுதியில் நேற்று நடந்த மற்றொரு தாலிபான் தாக்குதலில் மூன்று நேட்டோ
படையினர் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தான் ராணுவ வீரரின் வேடத்தில் வந்த
போராளி மூன்று ஆஸ்திரேலிய ராணுவத்தினரை சுட்டுக்கொன்றார். ஆப்கானிஸ்தான்
படையினருக்கு இவர்கள் பயிற்சி அளிக்க வந்தவர்களாவர்.
மூன்று மணிநேரத்திற்கு பிறகு குனார்
மாகாணத்தின் தலைநகரமான அஸதாபாத்தில் ஆப்கானிஸ்தான் ரகசிய புலனாய்வு
பிரிவின் தலைமையகத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் ஏராளமானோருக்கு
காயமேற்பட்டது. தாக்குதலை நடத்தியவர் பெண் ஆரம்ப அறிக்கை கூறுகிறது.
இங்கேயுள்ள பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண் திடீரென அரசு
அலுவலகத்திற்கு நுழைந்து துப்பாக்கியால் சுட்டபிறகு குண்டை
வெடிக்கவைத்துள்ளார். காயமடைந்த இரு காவலாளிகளுக்கு கடுமையான
காயமேற்பட்டுள்ளது.

Similar topics
» தாலிபான் தாக்குதலில் பிரான்ஸ் ராணுவத்தினர் 20 பேர் பலி!
» ஆப்கான் நகரத்தை கைப்பற்றியது தாலிபான்
» அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்
» ஆப்கான்:அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் 50 பேர் பலி
» தாலிபான் தாக்குதலில் காந்தஹார் மேயர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum