ஆப்கான் நகரத்தை கைப்பற்றியது தாலிபான்
Page 1 of 1
ஆப்கான் நகரத்தை கைப்பற்றியது தாலிபான்
காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் துஅப் நகரத்தின் கட்டுப்பாட்டை தாலிபான் போராளிகள் கைப்பற்றினர். போராளிகளும் ஆப்கான் ராணுவம் இரண்டு தினங்களாக கடுமையான போராட்டத்தை இந்நகரத்தில் நடத்தினர். போர் தந்திரத்தின் காரணமாக ராணுவம் வாபஸ் பெற்றுள்ளதாக போலீஸ் கமாண்டர் தெரிவிக்கிறார்.
ஏராளமான போராளிகளும், போலீஸ்காரர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் மீடியாவுக்கு அளித்த இ-மெயிலில் மாவட்டம் முழுவதும் தங்கள் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே மாகாணத்தில் பார்ஜி மதால் நகரத்தை ஏற்கனவே தாலிபான் மீட்டது. லட்சியம் முடிவடைந்ததாக அமெரிக்க ராணுவம் உரிமை கோரும் பிரதேசம் தான் இப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இறுதியில் ராணுவத்தை வாபஸ் பெறப்போவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்திருந்தார்.
இதற்கிடையே தெற்கு ஆப்கானில் நடந்த குண்டு வெடிப்பில் நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் கடுமையாக காயமுற்ற ராணுவ வீரன் மரணமடைந்ததாக நேட்டோ அறிவித்துள்ளது இவ்வருடம் ஆப்கானில் 190 அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

Similar topics
» ஆப்கான்:தாலிபான் தாக்குதலில் 16 நேட்டோ ராணுவத்தினர் பலி
» உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் ஆப்கான் கிராமங்கள்
» ஆப்கான்:கனடா ராணுவம் வாபஸ் பெறுகிறது
» சாதனை படைக்கும் ஆப்கான் சிவிலியன் மரணம்-ஐ.நா
» ஆப்கான்:அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் 50 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum