தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி

Go down

 அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி  Empty அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி

Post by முஸ்லிம் Mon Oct 25, 2010 3:51 pm

அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம். இனி மாணவர்கள் தங்கள் செல்போனிலேயே பாடங்களை படித்துக்கொள்ளலாம், M-Education என்ற இந்த சேவை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

அமீரகத்தின் அரசு செல்போன் நிறுவனமான எதிசலாத், கல்வி கற்கும் முறையில் நவீன நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்திவரும் பிளாக் போர்டு (Blackboard Inc) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த M-Education சேவையை வழங்கப்போகிறது, அபுதாபி பல்கலைகழகத்தில் வரும் ஜனவரி 2011ஆம் ஆண்டில் இருந்து இது சோதனை முறையில் நடைமுறைக்கு வருகின்றது.

இந்த Blackboard Mobile Learn solution மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடங்களையும், பாடம் சம்பந்தப்பட்ட பிற தகவல்களையும் நினைத்த நேரத்தில் தங்களின் செல்போன் மூலம் பெறலாம்.

அமீரகத்தில் 99 சதவிகிதத்தை அடைந்துள்ள எதிசலாத் நிறுவனத்தின் 3.5G மொபைல் அலைவரிசை மூலம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் Android phone, BlackBerry, iPhone மற்றும் iPad. போன்ற அனைத்து மொபைல் சாதனங்கள் மூலமும் எளிதில் பயன்படுத்தத்தக்கது.

இதற்கான ஒப்பந்தம் எதிசலாத், பிளாக் போர்ட் மற்றும் அபுதாபி பல்கலைக் கழக அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது குறித்து எதிசலாத் உயரதிகாரி அப்துல்லா ஹஷிம் தெரிவிக்கையில் இந்த திட்டம் எதிசலாதிற்கு மட்டுமல்ல அமீரக கல்வி சமுதாயத்திற்கே ஒரு மிகமுக்கிய நிகழ்வு. இதன் மூலம் அமீரகத்தின் கல்வி முறை அதன் அடுத்த கட்டத்திற்கு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்.

நன்றி : இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11139
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்
» அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!
» மதமாற்றம் மூலம் சிக்கலில் தவிக்கும் குஜராத் தம்பதிகள்
» உஸாமா படுகொலையின் மூலம் அமெரிக்காவின் பலஹீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-ஃபிடல் காஸ்ட்ரோ
» ஜனவரி 26 'டென்ஷன்': ஜம்முவில் கல்வி நிலையங்களை மூடும் காஷ்மீர் அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum