டெல்லி ஸ்ரீராமசேனா நடத்திய தாக்குதல்களில் ராகுல் ஈஸ்வருக்கு பங்கு: டெல்லி உளவுத்துறை
Page 1 of 1

புதுடெல்லி:டெல்லியில் ஸ்ரீராமசேனா,
பகத்சிங் க்ராந்தி சேனா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்தி
வரும் தாக்குதல்களின் சதித் திட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில்
பங்கேற்கும் கேரளாவைச் சார்ந்த சபரிமலை தந்திரி(முதன்மை சாமியார்)யின்
பேரனான ராகுல் ஈஸ்வருக்கு பங்கிருப்ப்பதாக டெல்லி போலீஸின் உளவுத்துறை
பிரிவு அறிக்கை அளித்துள்ளது.
பகத்சிங் க்ராந்தி சேனா என்ற ஹிந்துத்துவா
தீவிரவாத அமைப்பு கடந்த நவம்பர் 25-ஆம் தேதி டெல்லியில் நடத்திய ரகசிய
கூட்டத்தில் ராகுல் ஈஸ்வர் பங்கேற்றுள்ளார் என அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 26,27 தேதிகளில் டெல்லி ராம்லீலா
மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற சமூகநீதி
மாநாட்டை தடுக்க கன்னாட்ப்ளேசில் மோகன்சிங் ப்ளேஸ் கட்டிடத்தில் உள்ள
இந்தியன் காஃபி ஹவுஸில் வைத்து கடந்த நவம்பர் 25-ஆம் தேதி மாலை 3 மணி
அளவில் ஸ்ரீராமசேனா மற்றும் பகத்சிங் க்ராந்தி சேனா ஆகிய ஹிந்துத்துவா
தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்திற்கு சமூக இணையதளமான ஃபேஸ்புக் மூலமாக அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் இவ்விரு அமைப்புகளை சார்ந்தவர்கள்
மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் துவங்கி ஒரு மணிநேரம் கழித்து
ராகுல் ஈஸ்வர் இரண்டு ஸ்ரீராமசேனா உறுப்பினர்களுடன் கூட்டத்திற்கு வருகை
தந்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நடத்திய மாநாட்டில் சிலரை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தவும், மாநாட்டு
திடலுக்கு வெளியே போராட்டம் நடத்தவும் கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முடிந்தவரை தாக்குதல்களை நடத்த
தீர்மானித்துவிட்டு பின்னர் அத்திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
போலீஸ் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின்
செயல் வீரர்கள் உஷாராக இருந்ததால் இத்தாக்குதல் கைவிடப்பட்டது என
கருதப்படுகிறது. நவம்பர் 26-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் மாநாட்டு
திடலுக்கு முன்பாக ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா தீவிரவாதிகள்
போராட்டம் நடத்தியபொழுது போலீசார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பாப்புலர் ஃப்ரண்டின் ஆதரவாளர்கள் என பொய் கூறி மாநாட்டு திடலுக்கு உள்ளே
நுழைய முயன்ற இருவரை பாப்புலர் ஃப்ரண்ட் வாலண்டியர்கள் பிடித்து
போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் ஈஸ்வர்
பாப்புலர் ஃப்ரண்டை குறித்து பிறருக்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர்
போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஸ்ரீராமசேனா டெல்லி மாநில தலைவர் இந்தர்
வர்மா, பகத்சிங் க்ராந்தி சேனா தலைவர் தேஜீந்தர் பால் சிங்பாக,
பொதுச்செயலாளர் விஷ்ணு குப்தா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்ற இதர
பிரமுகர்கள் ஆவர்.
சந்தீப் என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர்
ஒருவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சரத் பவாரின் கன்னத்தில் அறைந்த
ஹர்வீந்தர் சிங்கும் பகத்சிங்க் ராந்தி சேனாவை சார்ந்தவர் ஆவார். முன்னர்
உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை கேமராவிற்கு முன்பு
தாக்கியவர்கள் இந்தர்வர்மா, தேஜீந்தர் பால் சிங், விஷ்ணு குப்தா
ஆகியோராவர். இவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக டிசம்பர்
10-ஆம் தேதி டெல்லியில் மேதாபட்கரும், சந்தீப் பாண்டேயும் சேர்ந்து
நடத்தவிருக்கும் பேரணியை தடுப்போம் என ஸ்ரீராம்சேனா மற்றும் பகத்சிங்
க்ராந்திசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Similar topics
» ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குஜராத் மோடி அரசின் குற்றப்பத்திரிகை
» ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
» பரத்பூருக்கு ராகுல் திடீர் வருகை
» இஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்
» முஸ்லிம் ஓட்டுக்களை குறிவைத்து தாருல் உலூம் நத்வதுல் உலமாக்களை சந்தித்த ராகுல் காந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum