எகிப்து தேர்தல் - இஸ்லாமியக் கட்சிகள் முன்னிலை, இஸ்ரேல் கவலை
Page 1 of 1

எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான
முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி பதிவாகியுள்ள
வாக்குகளில் 40 சதவிகிதத்தை பெற்று முன்னிலையில் உள்ளது.இந்தக்
கட்சி எகிப்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் சகோதரத்துவம் (இஹ்வானுல்
முஸ்லிமீன்) என்ற இஸ்லாமிய அமைப்பின் கட்சியாகும். மக்கள் தங்களின்
நம்பிக்கைக்குரியவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் செய்தித்
தொடர்பாளர் மஹ்மூத் கொஸ்லான் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி நடுநிலைப்
போக்கை கையாளும் என்றும் எதனையும் மக்கள் மீது திணிக்கப் போவதில்லை என்றும்
அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சி ஆட்சிக்கு
வந்தால் பெண்களுக்கு பர்தாவை கட்டாயமாக்குவார்கள் என முதலில் ஊடகங்கள்
செய்திகளை வெளியிட்டிருந்தன. அதனை மறுக்கும் விதமாக கொஸ்லான் இந்தக்
கருத்தை தெரிவித்தார்.
மற்றொரு முஸ்லிம் கட்சியான அன் நூர் 20
சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இது ஸலபி என்ற இஸ்லாமிய அமைப்பைச்
சார்ந்ததாகும். இரண்டு கட்சிகளும் இணைந்து இஸ்லாமிய அரசாங்கத்தை
அமைக்கவுள்ளதாக வெளியானத் தகவல்களை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு
மறுத்துள்ளது. தற்போது கூட்டணி பற்றிய எந்த பேச்சும் நடைபெறவில்லை என அந்த
அமைப்பு கூறியுள்ளது. அந் நூர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை விட
மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவதாக
சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி முன்னர் தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் எந்தவித காரணமும் கூறாமல் முழு
முடிவுகளையும் வெளியடாமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில்
இஸ்லாமியவாதிகள் வெற்றி பெறுவது கவலையளிப்பதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை
அமைச்சர் எஹூத் பராக் கருத்து வெளியிட்டுள்ளார். எந்தக்கட்சி ஆட்சிக்கு
வந்தாலும் 1979 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கையை
மதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Similar topics
» ஈரான் போர்க்கப்பல்கள் சூயஸ் கால்வாயில் நடமாட்டம்: அமேரிக்கா, இஸ்ரேல் கவலை
» எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு
» எகிப்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்:இஸ்ரேல் மன்னிப்பு கோரியது
» எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் இமாலய வெற்றி
» மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum