எகிப்து:அவசர நிலை இன்று வாபஸ்
Page 1 of 1
எகிப்து:அவசர நிலை இன்று வாபஸ்
கெய்ரோ:முப்பது ஆண்டுகளாக எகிப்தில்
அமுலில் இருந்த அவசரநிலைச் சட்டம் இன்று வாபஸ் பெறப்படுகிறது. ராணுவ
ஆட்சியாளர் ஹுஸைன் தன்தாவி அவசரநிலையை இன்று வாபஸ் பெறுவதாக
அறிவித்துள்ளார்.
ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்திய எகிப்து
மக்களின் முக்கிய கோரிக்கையான அவசர நிலையை வாபஸ் பெறுவதை அங்கீகரிப்பதாக
அவர் அரசு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.
ஜனநாயகரீதியிலான போராட்டம் மூலமாக ஹுஸ்னி
முபாரக் பதவியில் இருந்து விலகி ஓர் ஆண்டு முடிவுறும் வேளையில் இந்த
அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிபர் அன்வர் சதாத்தின்
கொலையைத் தொடர்ந்து 1981-ஆம் ஆண்டு மிகவும் சர்ச்சையை கிளப்பிய அவசரநிலை
எகிப்தில் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஹுஸ்னி
முபாரக்கின் அரசு அவசரநிலையை நீட்டித்துக்கொண்டு சென்றது. கடந்த ஆண்டு
ராணுவ அரசு இச்சட்டத்தின் வரம்பிற்குள் தொழிலாளர்கள் போராட்டம்,
போக்குவரத்துக்கு இடையூறு, போலி தகவல்களை பரப்புரைச் செய்தல் ஆகியவற்றை
உட்படுத்தி இச்சட்டத்தை வலுவாக்கியது. இந்நடவடிக்கையை எதிர்ப்பாளர்கள்
கடுமையாக எதிர்த்தனர்.
முபாரக் பதவி விலகிய பிறகும் தஹ்ரீர்
சதுக்கத்தில் நடந்த எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்பில் அவசரநிலை சட்டத்தை
வாபஸ் பெறவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

Similar topics
» ஆப்கான்:கனடா ராணுவம் வாபஸ் பெறுகிறது
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு
» அமெரிக்காவ தொடர்ந்து பிரிட்டனும் ஆப்கானிலிருந்து படைகளை வாபஸ் பெறுகிறது
» பாகிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum