தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலக வாழ்க்கை முடிவு !

Go down

உலக வாழ்க்கை முடிவு ! Empty உலக வாழ்க்கை முடிவு !

Post by srivai.khader Thu Mar 22, 2012 10:28 am

பூக்களுடன் புது மனம்
உலகிலே உன் வாழ்க்கை

தூக்கும் முன் சந்தூக்கில்
ஈ மொய்க்கும் உன் உடலை

பட்டு வேட்டி பளிங்கு சேலை
பள பளக்கும் உடல் மணக்கும்

பட்டென்று உயிர் பிரிந்தால்
நீ ஒரு ஜனாசாதான் மண்ணில்

கொட்டி கிடந்த செல்வமும்
கட்டி வந்த மனைவியும்
பொத்தி வளர்த்த பிள்ளையும்
உன் உடன் வர முடியாத பயணம்

வாழ்ந்த உலகில் செய்த வணக்கம்
பசித்திருந்து வைத்த நோன்பு
கொடுத்து கொண்ட ஜக்காத்து
செய்து வந்த நல்ல காரியங்கள்

இதை கொண்டே மறுமை உனக்கு
புரிந்து கொள் எல்லோருக்கும் இருக்கு

சொல்லி வராத பயணம் - இது
தூரமில்லை வரும் தருணம்

உலக வாழ்க்கை வெறும் போலி
உனக்கு வரும் முன் விழித்துக்கொள்

இறுதிப்பயணம் !

ஸ்ரீவை.காதர் -
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 5075
Points Points : 26
வயது வயது : 63

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum