ஷாருக்கானை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு: தாக்கரே
Page 1 of 1

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் பாகிஸ்தான் மீது காதல் கொண்டிருப்பதாக சிவசேனா தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
சிவசேனா கட்சியின் இதழான சாம்னாவில் வியாழக் கிழமையன்று வெளியான தலையங்கத்தில் ஷாருக் கானை கடுமையாகச் சாடியுள்ளார். ஷாருக்கான் தன்னை "பாதுஷா" என்று கருதிக் கொள்வதாகக் கூறியுள்ள தாக்கரே, அவருக்கு எதிராகப் போரட்டங்கள் நடத்தியன் மூலம் அவருடைய இடம் என்ன என்பதை சிவசேனா உணர்த்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நவம்பர் 28ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்த ஷாருக் கான் சிவசேனாவின் எதிர்ப்பை மனதில் இறுத்தி அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார் எனவும் தாக்கரே கூறியுள்ளார்.
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளின் மறுவாழ்விற்கும் நிதிதிரட்டுவதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும் என்ற சிந்தனை ஷாருக்கானுக்கு ஏன் ஏற்படவில்லை என்றும் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷாருக்கான் போன்றவர்களைக் கண்காணிப்பது தமது கடமை என்று கூறியுள்ள தாக்கரே, ஷாருக்கான் பாகிஸ்தான் மீது ஏன் மிகவும்கரிசனமாக நடந்து கொள்கிறார் என்பதற்கான காரணத்தை அரசு ஆராய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பேன்ற இப்பிரச்சனை குறித்த உண்மைகளைக் கண்டறிய நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.
ஷாருக்கான் "கான்" என்பதால் மட்டுமே அவரை விமர்சிக்கவில்லை என்றும் அவரது இடத்தில் அக்ஷய் அல்லது அஜய் தேவகன் போன்றோர் இருந்தாலும் தாம் இப்படியே செய்வேன் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.
இந்நேரம்

Similar topics
» பா.ஜ.க ஆட்சியில் ரூ.43,500 கோடி இழப்பு-விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்றக் கூட்டுக்குழு
» ஹஸாரேக்குப் பணம் கொட்டுகிறது - பால் தாக்கரே!
» மொஹாலி மைதானத்தில் பாக்.வீரர்கள் ‘தொழுகை’ :தாக்கரே எதிப்பு!
» மேற்கு வங்காளத்தின் வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க மம்தா கோரிக்கை
» சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum