மொஹாலி மைதானத்தில் பாக்.வீரர்கள் ‘தொழுகை’ :தாக்கரே எதிப்பு!
Page 1 of 1

மொஹாலி மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நேற்று நமாஸ் (தொழுகை) நடத்தியதற்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டி, மொஹாலி மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறுவதற்காக மைதானத்தில் நமாஸ் செய்தனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே தமது கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அறையில் நமாஸ் செய்திருக்கலாம்.ஆனால் மைதானத்தில் நமாஸ் செய்ததன் மூலம் புனித போருக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மொஹாலி மைதானத்தை சுற்றி டாங்கிகள்,இராணுவ வீரர்கள், ஏவுகணைகள்,பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த போட்டியின்போதாவது இதுபோன்ற ஆயத்தங்களை பார்க்க முடிந்ததா? பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் ஏன் இப்படி? இவ்வாறு அதில் தாக்கரே எழுதியுள்ளார்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்ததையும் தாக்கரே விமர்சித்திருந்தார்.
கிலானியுடன் ஏன் நிறுத்த வேண்டும்?நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு மற்றும் மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கவேண்டியதுதானே? என்று தாக்கரே கிண்டலடித்திருந்தது (ஏற்கனவே இந்நேரம்.காமில் வெளியாகியிருந்தது) குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

Similar topics
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» ஹஸாரேக்குப் பணம் கொட்டுகிறது - பால் தாக்கரே!
» ஷாருக்கானை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு: தாக்கரே
» தொழுகை !
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum