குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?
குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?
ஐயம்: குழந்தைபிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா? என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், "இன்ன வாரத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் வாருங்கள். குழந்தையோடு செல்லுங்கள்" என்று டாக்டர்கள் கூறி அதன்படி குழந்தையையும் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இது முரண்பாடு தானே? (மின்னஞ்சல் வழியாக சகோதரர் வேணுகோபாலன்)
தெளிவு: அன்பு சகோதரர் வேணுகோபாலன் அவர்களே! போன்ற இறைவசனங்கள் உங்களுடைய ஐயத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம். முதன் முதலாகக் கருவுலகைப் பற்றி அறிவியல் உலகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1615இல்தான். ஆனால், "பெண்ணுடைய சினை முட்டையோடு ஆணுடைய விந்து கலந்து குழந்தை உருவாகிறது" என்று குர்ஆன் அறிவிப்பது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது வியக்க வைக்கும் செய்தியன்றோ! ஆனால், எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை. காரணம், மகப்பேற்றில் கடைசி நேர இடைஞ்சல்கள் பல உள்ளன. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்.
உங்களது இந்தக் கேள்வி, தங்களால் சத்தியத்தை அறிய, சந்தேக நிவர்த்திக்காக தெளிவு பெற எழுப்பப்பட்ட ஒரு கேள்வி எனும் அடிப்படையில் இதை நாம் அணுகுவதோடு உங்களுக்கு எங்களது பாராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.
" ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).
"நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ..." (அல்குர்ஆன் 31:34).
"ஒவ்வொரு பெண்ணும் (தன் கருவறையில்) சுமந்து கொண்டிருப்பதையும் அவை சுருங்கிக் குறைவதையும் விரிந்து கொடுப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் தீர்மானிக்கப் பட்ட அளவு இருக்கின்றது" (அல்குர்ஆன் 13:8).
"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஐயமிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்!) நாம் நிச்சயமாக உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், அடுத்த கட்டத்தில் அலக்கிலிருந்தும், அதையடுத்து அரைகுறைத் தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்து, பின்பு குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் ..." (அல்குர்ஆன் 22:5)
முதலாவதாக,
ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண்ணுக்கு இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காலக்கெடு என்பது அப்பெண் கருத்தரித்ததிலிருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இக்கணக்கு அப்பெண்ணுக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கணக்கைச் சொல்வதற்கு ஒரு மகப்பேறு மருத்துவர்கூட இப்போது தேவையில்லை.
"கம்ப்யூட்டரே தெரிந்து கொண்டு சொல்லும்போது கடவுளுக்குத் தெரிந்தாலோ தெரியா விட்டாலோ நமக்கென்ன?" என்ற கேள்வி வரும்.
கம்ப்யூட்டரையும் அதற்கான மென்பொருளையும் உண்டாக்கியவன் மனிதன். அந்த மனிதனையே உண்டாக்கியவன் இறைவன் என்பது முஸ்லிம்கள் மட்டுமின்றி, கடவுளை நம்புகின்ற எல்லா ஆத்திகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கம்ப்யூட்டருக்கும் மருத்துவருக்கும் ஒரு பெண் கருவடைவதற்கு முன்னர், இன்ன நாளில், இன்ன நேரத்தில், இன்ன இனத்தில், இன்ன இடத்தில், இன்ன வகையில் குழந்தை பெறுவாள் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையாகும். துல்லியம்தான் இங்குத் தலையாய பேசுபொருள்.
குறிப்பாக, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு, கி.பி எழுநூறுகளின் தொடக்கத்தில் அருளப்பட்டு, அவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற குர்ஆன் அடிப்படையாகத் திகழ்கின்றது. ஒரு குழந்தை கருவுருவதைப் பற்றி அது கூறுவதைக் கேட்போம்:
"(பெண்ணின் சினைமுட்டையோடு) கலவையான விந்திலிருந்து நாமே மனிதனைப் படைத்தோம் ..." (அல்குர்ஆன் 76:2).
There are a multitude of statements in the Quran on the subject of human reproduction which constitute a challenge to the embryologist seeking a human explanation for them. It was only after the birth of the basic sciences which contributed to our knowledge of biology and the invention of the microscope, that humans were able to understand the depth of those Quranic statements. It was impossible for a human being living in the early seventh century to have accurately expressed such ideas. There is nothing to indicate that people in the Middle-East and Arabia knew anything more about this subject than people living in Europe or anywhere else.
முழுதும் படிக்க
குர்ஆன் கூறுவதைக் கேட்ட விஞ்ஞானிகளின் வியப்பு ஆவணமாக்கப் பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=XaSfE1DW2-w
http://www.slideshare.net/moralsandethics/scientists-comments-on-h-quran
இரண்டாவதாக,
உங்களுடைய கேள்வியான இயல்புக்கு மாற்றமாக நடைபெறும் சிஸேரியன் விஷயத்துக்கு வருவோம்.
கருவைச் சுமக்கும் தாயின் உயிருக்கோ கருவிலிருக்கும் மகவின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அந்த ஆபத்தைக் களைவதற்கான கடைசியாகக் கையாளும் முயற்சியாகத்தான் சிஸேரியன் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
நாளடைவில், அது நாள்-நட்சத்திரம் மீது மோகம் கொண்ட சிலரால், இயல்பான பேறுநாளைக்கு முன்னதாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டுச் செயற்கையாக சிஸேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.
துல்லியத்தில் மனிதர் தோற்பர்; இறைவன் தோற்பதில்லை. ஏனெனில், மனிதனின் அறிவு வரையறுக்கப் பட்டது; இறைவனின் அறிவுக்கு வரையறை இல்லை.
அவனே முற்றாய் அறிந்தவன்.
நன்றி : சத்திய மார்க்கம்
» தேவையுடையவனா...இறைவன்?
» மேற்குலகை கண்டிப்போம்-விடுதலை என்பது வார்த்தை அல்ல வேட்கை என நிரூபிப்போம்
» தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?
» குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !