தேசியக் கொடியேற்றக் கூடாது என்பதன் மூலம் தீவிரவாதிகளிடம் சரணடைகிறார் பிரதமர்-அத்வானி
தேசியக் கொடியேற்றக் கூடாது என்பதன் மூலம் தீவிரவாதிகளிடம் சரணடைகிறார் பிரதமர்-அத்வானி
டெல்லி: ஸ்ரீநகர், லால் சவுக்கில் தேசியக் கொடியை நாங்கள் ஏற்றக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுவது, தீவிரவாதிகளிடம் அவர் சரணடைந்து வருவதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. மேலும், திட்டமிட்டபடி லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை பாஜகவினர் ஏற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,அரசியல் லாபத்துக்காக நாங்கள் தேசியக் கொடியை ஏற்ற முயலவில்லை. மாறாக, பிரிவினைவாதிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையிலேயே தேசியக் கொடியை ஏற்றவுள்ளோம். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் தீவிரவாதிகளிடம் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றனர். நாங்கள் கொடியேற்றக் கூடாது என்று தடுக்கிறார்கள்.
கலவரம் ஏற்படக் கூடாது, அமைதி நிலவ வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் விரும்பினால், கலகக்காரர்களைத் தடுப்பதிலும், ஒடுக்குவதிலும், தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க நினைப்போர் மீதும்தான் கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மாநில அரசு பிரயோகித்திருக்க வேண்டும். மாறாக எங்களை ஒடுக்க முயலக் கூடாது என்றார் அத்வானி.
தட்ஸ்தமிழ்
» எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா
» அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி
» ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை
» முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி