வெளிநாட்டு அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்: ஹோஸ்னி முபாரக்!
Page 1 of 1

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிணிய மாட்டேன் என்றும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் கூறியுள்ளார்.
எகிப்து அதிபர் பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் விலக வேண்டும் என்று கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து ஹோஸ்னி முபாரக் தன்னுடைய பதவியில் இருந்து இன்று விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது:
நாடு போரைச் சந்தித்திருந்த நிலையிலும் அமைதியான நிலையிலும் என நாட்டிற்காக நான் 60 ஆண்டுகள் உழைத்துள்ளேன். என்னுடைய இதயத்தில் இருந்து இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
தற்போது மக்களுடைய போராட்டத்தின் நியாயத்தை நான் உணர்கிறேன். மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த தியாகிகளின் ரத்தம் வீணாகாது என நான் உறுதியளிக்கிறேன்.
இந்தப் பிரச்சனையை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
மக்களுடைய கோரிக்கையான அரசியல் சாசன சட்டத்தில் மாற்றங்கள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் சாசனத்தின் ஆறு சட்டங்களில் மாற்றங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த தேர்தல் வரும் வரை நான் நாட்டையும் நாட்டின் சட்டங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழியில் உறுதியாக இருக்கிறேன். இந்த உறுதி மொழியை நான் கடவுள் முன்னரும் எகிப்திய மக்கள் முன்னரும் எடுத்திருந்தேன். என்னுடய உறுதி மொழியை தொடர்ந்து காப்பாற்றுவேன்.
ஹோஸ்னி முபாரக் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, ஹோஸ்னி முபாரக் தன்னுடை பதவியில் இருந்து விலகி உமர் சுலைமானிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்ப்பதற்காக ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசாம் பட்ராவி கூறியிருந்ததைத் தொடர்ந்து ஹோஸ்னி முபாரக் தன்னுடைய பதவி விலகலையே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதவிக்காலம் முடிவடைதற்கு முன் பதவியிலிருந்து விலகும் வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நேரம்

Similar topics
» எகிப்து புரட்சி - பதவி விலகினார் முபாரக்!
» 2011-ஆப்கானில் 565 வெளிநாட்டு ராணுவத்தினர் பலி
» முபாரக் விலகல் - இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு!
» பூகம்பம்:வெளிநாட்டு உதவியை கோருகிறது துருக்கி
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum