பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-17 பேர் மரணம்
Page 1 of 1

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியின மாவட்டமான வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். தத்தாகேல் பிரதேசத்தில் எட்டு ஏவுகணைகள் பாய்ந்து சென்று தாக்கின. அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானின் எல்லையை கடந்து நடத்திவரும் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசு கடும் விமர்சனத்தை வெளியிட்டிருந்தது.
அமெரிக்கா குறிவைத்துள்ள போராளிகள் விரல் விட்டு எண்ணிக்கையில் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும், தாக்குதலில் பெரும்பாலும் கொல்லப்படுவது அப்பாவி மக்கள் எனவும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். தாக்குதலை நிறுத்த நினைக்கவில்லை என சி.ஐ.ஏ இயக்குநர் லியோன் பனேட்டா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
சர்வதேச சட்டங்களை காற்றில் பறத்திவிட்டு அமெரிக்க ராணுவம் அல்காயிதா போராளி இயக்க தலைவர் உஸாமா பின்லேடனை பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றது தொடர்பாக இருநாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ள சூழலில் இந்த புதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

Similar topics
» பாகிஸ்தானில் தொடரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்-20 பேர் பலி
» ஆப்கான்:அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் 50 பேர் பலி
» பட்டினியால் சோமாலியாவில் 13 பேர் மரணம்
» மணிப்பூரில் குண்டுவெடிப்பு:7 பேர் மரணம்!
» நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum