லிபியாவில் நேட்டோ படை பயங்கர தாக்குதல்
Page 1 of 1
லிபியாவில் நேட்டோ படை பயங்கர தாக்குதல்
திரிபோலி:லிபியாவின் தலைநகர் திரிபோலியில் நேட்டோவின் போர் விமானங்கள் பயங்கரதாக்குதலில் ஈடுபட்டன. சாதாரண மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் லிபியாவில் தாக்குதலை துவங்கிய நேட்டோ படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டதாக பி.பி.சி கூறுகிறது.
நேற்றைய நேட்டோவின் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். கத்தாஃபி ராணுவத்திற்கு எதிராக தாக்குதலை வலுப்படுத்த போவதாக பிரிட்டனும், பிரான்சும் நேற்று முன் தினம் அறிவித்திருந்தன.
இதன் ஒரு பகுதியாக கூடுதலான ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.பாப் அல் அஸீரியாவில் கத்தாஃபியின் வீட்டிற்கு அருகில் வாகன தயாரிப்பு மையம் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இங்கு கொல்லப்பட்ட 3 நபர்களும் அப்பாவி மக்கள் ஆவர்.திரிபோலியில் நேட்டோ கூட்டுப்படுகொலை செய்வதாக அரசு செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் கூறுகிறார். நேட்டோவின் தாக்குதல்களை கண்டித்து வீதிகளில் இறங்கிய மக்கள் கத்தாஃபிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
இதற்கிடையே வாஷிங்டனில் ஒரு பிரதிநிதி அலுவலகம் திறப்பதற்கான அழைப்பை எதிர்ப்பாளர்கள் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலாளர் ஜெஃப்ரே ஃபெல்ட்மான் தெரிவிக்கிறார். எதிர்ப்பாளர்களின் மைய நகரமான பெங்காசிக்கு செல்லும் அமெரிக்காவின் மூத்த தூதரக பிரதிநிதிதான் ஃபெல்ட்மான்.
கத்தாஃபி பதவி விலகவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, எதிர்ப்பாளர்களின் அரசை அதிகாரப்பூர்வ அரசாக ஏற்றுக்கொள்ளவியலாது என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மேலும் அதிகமான நேட்டோ நாடுகள் லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதில் பங்கு சேர அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar topics
» நேட்டோ தாக்குதல்:அமெரிக்காவின் அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது
» நேட்டோ தாக்குதல் ஹில்லாரியிடம் கோபத்தை வெளிபடுத்திய ஹினா ரப்பானி
» துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)
» நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!
» ஆப்கான்:தாலிபான் தாக்குதலில் 16 நேட்டோ ராணுவத்தினர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum