ஐ.நா அங்கீகாரம்:ஃபலஸ்தீன் முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு
Page 1 of 1

தோஹா:சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை தேடுவதற்கான முயற்சிக்கு அரப் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது. கத்தரில் நடந்த அரப் லீக்கின் கண்காணிப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.
1967-ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகள் அடங்கிய ஃபலஸ்தீன் நாட்டிற்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக அரப் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஃபலஸ்தீன் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை பெறுவதற்கான தீர்மானத்தில் மாற்றமில்லை என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியதற்கு பிறகு அரப் லீக் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தயாராகும் வேளையில் மத்திய ஆசியாவின் சமாதான நடவடிக்கைக்கு முடிவு ஏற்படும் என கூட்டத்திற்கு தலைமை வகித்த கத்தரின் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜஸீம் அல்தானி தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக தொடரும் ஃபலஸ்தீன் – இஸ்ரேல் தர்க்கத்திற்கு பரிகாரம் காண அமெரிக்க அதிபர் பாரக் ஒபாம முன்வைத்த நிபந்தனைகள் உள்ளிட்ட காரியங்கள் அரப் லீக்கின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நடவடிக்கை சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் என மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்திருந்தார்.நெதன்யாகுவின் அறிக்கை இஸ்ரேல் சமாதானத்தை விரும்பவில்லை என்பதை நிரூபிப்பதாக கத்தரின் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், ஃபலஸ்தீனிற்கு பூரண உறுப்பினர் அந்தஸ்து அளிக்க ஐ.நாவிடம் அரப் லீக் வலியுறுத்தும்.இதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆதரவை அரப் லீக் எதிர்பார்ப்பதாக கத்தர் நியூஸ் ஏஜன்சி கூறுகிறது.

Similar topics
» பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: இந்தியா முழு ஆதரவு
» ஃபலஸ்தீன்:காதர் அத்னானின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது
» சிரியா:அரப் லீக்கின் பரிந்துரைகள் ஒப்படைப்பு
» அரப் லீக்குடன் ஒப்பந்தம்-சிரியா அறிவிப்பு
» சிரியாவுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum