தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வஹ்ததே இஸ்லாமியின் உறுப்பினர்கள் கைது முஸ்லீம் இயக்கங்களை ஒடுக்கும் சதி : அதாவுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

Go down

வஹ்ததே இஸ்லாமியின் உறுப்பினர்கள் கைது முஸ்லீம் இயக்கங்களை ஒடுக்கும் சதி : அதாவுர் ரஹ்மான் குற்றச்சாட்டு  Empty வஹ்ததே இஸ்லாமியின் உறுப்பினர்கள் கைது முஸ்லீம் இயக்கங்களை ஒடுக்கும் சதி : அதாவுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

Post by முஸ்லிம் Fri Jun 10, 2011 3:52 pm

கொச்சி : கடந்த 6ம் தேதி கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள முத்தலமடா எனும் இடத்தில் சந்தேகத்திடமான முறையில் கூட்டம் நடத்தியதாக வஹ்ததே இஸ்லாமியின் 21 உறுப்பினர்கள் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அறிக்கை வெளியிட்ட வஹ்ததே இஸ்லாமியின் தலைவர் அதாவுர் ரஹ்மான் வஜ்தி இது முஸ்லீம் இயக்கங்களை ஒடுக்கும் சதி என குற்றம் சாட்டியுள்ளார்.




இது குறித்து கூறிய பாலக்காடு எஸ்.பி. திவாகரன் கைது செய்யப்பட்ட 21 நபர்களில் 20 நபர்கள் கோயம்புத்தூரையும் ஒருவர் சென்னையும் சார்ந்தவர். அவர்களில் சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் சையது அப்துர் ரஹ்மான் மற்றும் சையது முஹமது புகாரி இருந்ததால் சிமியுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைப்பற்றதக்க ஆவணங்கள் இல்லாததால் அவர்களை பிணையில் விடுவித்தோம் என்றார். மேலும் அவர்கள் ஆன்மிக வகுப்புகளை எடுக்கவே கூடியதாகவும் கூறினார்.

”வஹ்ததே இஸ்லாமி என்றால் இஸ்லாமிய கட்சி என்று பொருள். மற்ற சமூக சேவை இயக்கங்களை போன்று நாங்கள் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, இஸ்லாத்தை ஒரு மதமாக அல்லாமல் வாழ்க்கை நெறியாக பரப்புகிறோம்” என்று அதன் தமிழக பொறுப்பாளர் புகாரி தெரிவித்தார். மதுரையில் தங்கள் கிளை அலுவலகம் செயல்படுவதாகவும் திட்டமிட்ட முறையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆன்மிக வகுப்புகளை தாங்கள் நடத்துவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வஹ்ததே இஸ்லாமியின் அகில இந்திய தலைவர் அதாவுர் ரஹ்மான் வஜ்தி “ சிமியுடன் தொடர்புடையவர்கள் எனும் பெயரில் இஸ்லாமிய இயக்கங்களை ஒடுக்கும் போக்கை சென்ற மார்க்ஸிட் அரசாங்கம் செய்ததை போல் தற்போதுள்ள காங்கிரஸ் அரசாங்கமும் செய்வதை கண்டிப்பதாகவும், முஸ்லீம் தலைவர்கள் உரிய முறையில் கண்டிக்க தவறினால் நாளை இது போல் ஓவ்வோர் அமைப்பும் அரசால் ஒடுக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும் – அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்
» மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு
» அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது – காம்னஈ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum