அமெரிக்கா-தாலிபான் பேச்சுவார்த்தை-மத்தியஸ்தராக கத்தர்
Page 1 of 1

தோஹா:ஆப்கானிஸ்தானை அநியாயமாக ஆக்கிரமித்து 10 வருடங்கள் தாண்டிய பிறகு அந்நாட்டிலிருந்து எவ்வாறேனும் தலை தப்புவதற்காக போராடிவரும் அமெரிக்கா தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதனை ஏற்கனவே ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் உறுதிச்செய்திருந்தார். இந்நிலையில் இப்பேச்சுவார்த்தையில் கத்தர் மத்தியஸ்தம் வகிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பத்திரிகையான நிதாஇ மில்லத் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால், கத்தர் அதிகாரிகளையோ இதர நபர்களையோ மேற்கோள் காட்டாமல் இச்செய்தி வெளியாகி உள்ளது. தாலிபானின் அரசியல் பிரிவு தலைவரான தய்யிப் ஆகா கத்தர் அதிகாரிகளுடன் முதலில் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஆகா ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அப்பத்திரிகை கூறுகிறது. டிசம்பர் நடைபெறவிருக்கும் இரண்டாவது பெர்ன் மாநாட்டின் முன்னோடியாக இப்போதைய பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
அமெரிக்காவின் ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கிய 2001-ஆம் ஆண்டிற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டை உருவாக்குவது தொடர்பான முதல் பெர்ன் மாநாடு நடைபெற்றது. ஆப்கானிலிருந்து அமெரிக்காவிற்கு எளிதாக வெளியேறுவதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அப்பத்திரிகை கூறுகிறது. கடந்த வாரம் வெளியான உருது செய்தியை பாகிஸ்தானின் த நேசன் பத்திரிகை நேற்று முன்தினம் ஆங்கிலத்தில் வெளியிட்டது. கடந்தவாரம் கத்தர் அதிகாரிகளும், கர்ஸாய் அரசு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். ஆப்கான் பிரதிநிதியாக பாகிஸ்தானில் ஆப்கான் தூதர் உமர் தாவூத்ஸாய் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார் என தகவல் கூறுகிறது.

Similar topics
» ஹக்கானி குழுவுடன் அமெரிக்கா நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை
» மேற்காசிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் – அமெரிக்கா
» தாலிபான்-அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு பிரான்சு ஆதரவு
» முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum