ஃபலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவியை அமெரிக்கா எதிர்க்கும்
Page 1 of 1

வாஷிங்டன்:பூரண ஐ.நா உறுப்பினர் பதவிக்கான ஃபலஸ்தீனின் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கும்.ஃபலஸ்தீனின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்பதால் இதனை எதிர்க்கப் போவதாக ஐ.நாவில் அமெரிக்க துணை தூதர் ரோஸ்மேரி டிகார்லொ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஐ.நா பொது அவைக்கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்காவால் ஆதரிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் ஃபலஸ்தீனின் தேவைக்கு ஒருபோதும் உதவிகரமாக இருக்காது.
ஃபலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதற்கான முயற்சிகளை தொடர்வோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதுதான் விரும்பத்தக்கது என டிகார்லோ தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், 120 ஐ.நா உறுப்புநாடுகள் சுதந்திர ஃபலஸ்தீனை அங்கீகரிக்கும் பொழுது எந்தவொரு நடவடிக்கையும் ஒருதலைபட்சமாகாது என ஃபலஸ்தீன் பிரதிநிதி ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் ஃபலஸ்தீனுக்கு பூரண உறுப்பினர் பதவி கிடைப்பது சுதந்திர ஃபலஸ்தீன் என்ற கொள்கைக்கு உதவிகரமாகவே இருக்கும் என மன்சூர் மேலும் கூறினார்.
1967-ஆம் ஆண்டு எல்லையை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர ஃபலஸ்தீன் என்ற நாடு என்பதுதான் ஃபலஸ்தீனின் கோரிக்கையாகும். கிழக்கு ஜெருசலம், மேற்கு கரை, காஸ்ஸா ஆகிய பகுதிகள் அடங்கியதுதான் சுதந்திர ஃபலஸ்தீன். ஆனால், இவற்றில் பல பகுதிகளும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா
» ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்
» ஃபலஸ்தீனுக்கு உறுப்பினர் பதவி:யுனெஸ்கோவிற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்
» பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum