தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?

Go down

முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?  Empty முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?

Post by முஸ்லிம் Thu Dec 29, 2011 8:03 pm

வாஷிங்டன்:தாலிபான் தலைவர் முல்லா உமரை
தீவிரவாத பட்டியலில் இருந்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ
நீக்கியுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி
பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை
இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

தாலிபான் போராளிகளுடன் அமைதி
பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ள வேளையில் இச்செய்தி
வெளியாகி உள்ளது.தாலிபானுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த முல்லா உமரை தீவிரவாத
பட்டியலில் இருந்து நீக்கியதாக அச்செய்தி கூறுகிறது.2001 ஆம் ஆண்டு செப்.11
தாக்குதலை காரணம் காட்டி அமெரிக்கா ஆப்கானிஸ்தானை அநியாயமாக ஆக்கிரமித்த
வேளையில் முல்லா உமர்தான் ஆப்கானின் ஆட்சியை தலைமையேற்று நடத்தி வந்தார்.
2001-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது தாக்குதல் நடத்திய
முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராக முல்லா உமரையும்
அமெரிக்கா குறிப்பிட்டது.அமெரிக்க ஆக்கிரமிப்பின் துவக்கத்தில் தலைமறைவான
முல்லா உமர் பின்னர் பொது அரங்கில் தென்படவில்லை.

ஆனால், முல்லா உமர் எஃப்.பி.ஐயின்
தீவிரவாத பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், ஆனால் வெளியுறவுத்துறை அவரை
பிடித்து தந்தால் பரிசு அறிவித்தது என எஃப்.பி.ஐயின் செய்தித்தொடர்பாளர்
பால் ப்ரஸனை மேற்கோள்காட்டி அமெரிக்க மாத இதழான அட்லாண்டிக்
கூறுகிறது.இச்செய்தி சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து பாக்.பத்திரிகையான
எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் இச்செய்தியை தமது இணையதளத்தில் இருந்து
நீக்கிவிட்டது.


முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது
» தேடப்படும் குற்றவாளிகள்:மரணித்தவர்களும் பட்டியலில் இடம் பிடித்த அதிசயம்
» முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்
» அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் உறுதியாக இருப்பது என்.டி.எஃப்: விக்கிலீக்ஸ் தகவல்
» தவறான இந்திய வரைபடம்: அமெரிக்கா நீக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum